Hot Posts

6/recent/ticker-posts

அனாதைகளுக்கு உணவு கொடுத்து அரவனைக்கும் அதிரை இளைஞர்களுக்கு குவியும் பாராட்டு




அதிராம்பட்டினத்தை சேர்ந்த இளம் இளைஞர்கள்  தாய் ட்ரஸ்ட் என்ற பெயர் மூலம் அனாதைகளாக ஆதரவற்று தெருக்களில் திரிபவர்களுக்கு தினமும் ஒருமுறை உணவு அளித்து உயிர் கொடுக்கின்றனர்

இந்த இளைஞர்கள் அதிராம்பட்டினம் பகுதிகளில் உணவகங்களில் மீதம் உள்ள உணவுகளை பெற்று பார்சல் செய்து ஒருவேளை உணவு உன்பதற்க்கு தவிக்கும் அனாதைகளை நேரில் சென்று அவர்களுக்கு உணவு,தண்ணீர் ஆகியவற்றை எந்த ஒரு விளம்பரமும் இல்லாமல்  செய்து அனைத்து சமுதாய மக்களின் அன்பை பெற்று வருகின்றனர்

மூன்று ஆண்டுகளாக இவர்கள் உணவு கொடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். முதலில் 25 பேருக்கு உணவு கொடுக்க ஆரம்பித்தவர்கள், இன்றைக்கு சுமார் 50 பேர் வரை தினமும் உணவு கொடுக்கின்றனர். 

ஆதரவற்றவர்களுக்கு உணவு எடுத்துச் சென்று அதனை வழங்குவது என்று இந்த இளைஞர்களின் குடும்பத்தாரும்  கரம் கொடுக்கிறார். இந்த இளம் வயதிலேயே சேவை செய்யும் இவர்களது வீடியோ சமுக வலைத்தளத்தில் பாராட்டைப்பெற்று வருகின்றது