Hot Posts

6/recent/ticker-posts

பரந்த அன்பும்,சேவையும் கொண்ட மனப்பான்மை உள்ள மருத்துவர்கள் ஹாஜாமுஹைதீன்.ஆர்த்தோ மருத்துவர் சஃபியுத்தீன். முஸ்லிம்லீக் மாவட்ட நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து.


அதிராம்பட்டினம்:
மருத்துவர்களுக்கு பரந்த அன்பும் சேவை மனப்பான்மையும் மிகவும் அவசியம் உயிர் வாதையில் துடித்துக்கொண்டிருக்கும் ஓர் உயிரைக் காணும்போதெல்லாம் மருத்துவரின் மனதில், அந்த உயிரை எப்படியாவது காப்பாற்றிவிடுவோம் என்கிற நம்பிக்கை மனதில் ஒளிர்ந்துகொண்டே இருக்கும். கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டிக் கொடுத்தாலும், மருத்துவர்களின் சேவையை வேறு எதனோடும் அளவிடவே முடியாது. 

இந்த உலகில் அல்லாஹ்வின் உதவியைக்கொண்டு  மருத்துவரின் அளப்பரிய சேவையைக் கண்டு நோயாளிகள் மருத்துவர்களை வாயார வாழ்த்துவது உண்டு. 

அந்தவகையில் அதிராம்பட்டினம் மருத்துவர்கள் ஹாஜா முஹைதீன்,  ஆர்த்தோ மருத்துவர் சஃபியுத்தீன் இருவர்களின் மருத்துவ சேவைகளை மனதாரா பாராட்டும் அனைத்து சமுதாய மக்கள் இவர்களின் சேவையை பாராட்டும் விதத்தில் இவர்களின் சேவையை பாராட்டி இந்தியயூனியன் முஸ்லிம்லீக் தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் சால்வை அணிவித்து,பாராட்டி  எதிர்வரும் பவளவிழா மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்பிக்க அழைப்பு கொடுத்தனர்

அல்லாஹ்வின் உதவி ஒருமனிதனுக்கு கிடைக்க ,இவர்கள் மற்றவர்களுக்கு அன்பும் ,சேவையும் ,கருணையும் செய்தால் அந்த மனிதனிடம் அல்லாஹ்வின்  உதவி கிடைக்கும் அந்தவகையில் இந்த இரண்டு மருத்துவர்கள் உள்ளனர்  இவர்கள்  சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டவர்களாக உள்ளனர் என்று பலதரப்பட்ட மக்களின் கருத்தாக உள்ளது