Hot Posts

6/recent/ticker-posts

பெட்ரோல் விலைஉயர்வு :பாதிக்கப்படும் அதிரையர்கள்!

தற்பொழுது  அதிரை டூ சென்னை சென்னைடூ அதிரை செல்லும் தனியார் சொகுசு பேருந்துகள் ரூ 300+ கட்டணமாக வசூலிக்கின்றனர் 
இதை பணக்காரர்கள் இலகுவாக செலவு செய்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
 
ஆனால் வேலைதேடி மற்றும் மருத்துவத்திற்க்காக  சென்னை செல்லும் ஏழைகள் நடுத்தர மக்கள் சொகுசு  பேருந்துகளில் தான் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
 
ஏனென்றால் நமதூரில் இருந்து புறப்படும் அரசு பேருந்தான தடம் எண் 333 கடந்த ஓராண்டாக அதிரைக்கான சேவையை நிறுத்திவிட்டது.
 
மற்றொரு பேருந்தான அரசு சொகுசு பேரூந்தின் சேவையையும் கடந்த 2 மாதமாக நிறுத்தியுள்ளது .
 
இந்த சூழலில்
எரி பொருளின்  விலை உயர்வால் மீண்டும் தனியார் பேருந்துகள் கட்டண உயர்வு செய்யப்போவதாக செய்திகள் கசியத்துவங்கி விட்டன. இதனால் பாதிக்கபோவது நம்மூர் ஏழை எளிய மக்களும் தான் என்பதில் ஐயம் இல்லை.
 
எனவே நமதூரில் இருந்து முன்பு இயக்கப்பட்ட அரசு விரைவு பேருந்து தடம் எண் 333யும் அரசு சொகுசு பேருந்தையும் மீண்டும் இயக்க வலியுறுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் செய்வார்களா ?