தமிழகமெங்கும் உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு நேற்றுடன் முடிவடைந்தது.இந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிரையில் பேரூராட்சி தலைவர் பதவிக்கு 12 பேர் போட்டியிட்டனர்.பொதுமக்கள் அனைவரும் ஆர்வத்துடன் நேற்று வாக்களித்தனர்.பொதுமக்களும்,வெளிநாட்டு வாழ் அதிரை சகோதரர்களும் உள்ளாட்சித் தேர்தலின் முடிவுகளை தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கடந்த நாட்களில் உள்ளாட்சித் தேர்தல் சூடு பிடித்த நிலையில் தற்பொழுது பொதுமக்களிடையே உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளும் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிரை உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று பேரூராட்சி கோட்டையில் அமரப்போவது யார்? என்பதனை அறிய நாளை வரை காத்திருங்கள்.
Social Plugin