Hot Posts

6/recent/ticker-posts

நன்றி அறிவிப்பு..!



அன்புடையீர், 
       அஸ்ஸலாமு அலைக்கும்..
  நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் அதிராம்பட்டினம் பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிட்டு 1142 வாக்குகள் இறைவனின் நாட்டத்தால் பெற்றேன்.தேர்தல் விதிகளுக்குப்புறம்பான பணபுயல் இடைவிடாது வீசிய நிலையிலும் அதில் சற்றும் நிலைகுலையாத நல்ல உள்ளங்கள் அளித்த விலைமதிக்க முடியாத வாக்குகள் தன அது.
 என்னுடைய மனம் திறந்து பேசுகிறேன் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட பிரசுரத்தில் என்னுடைய உறுதிமொழியை நம்பி,என்மேல் வைத்துள்ள உண்மையான அன்பினாலும்,பாசத்தினாலும்,மேலும்சிலர் உங்களுக்கு அள்ளிகொடுக்க முன்வந்தும் அதை துச்சமென கருதி இலஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் என்ற சொல்லை தன் நெஞ்சத்தில் வைத்து கடமை தவறாத கண்ணியவான் களாகிய நீங்கள் எனக்கு அளித்த வாக்கிற்கு என் ஆள் மனதிலிருந்து பல நூறு நன்றிகளை உங்களுக்கு உரித்தாக்குகிறேன்.
வீடு,வீடாக சென்று இரவு,பகல் பாராமல் எங்களுடைய தகுதி எதிர்கால செயல்பாடுகள் இவைகளை மட்டும் கருத்தில் கொண்டு வாக்கு சேகரிப்பு என்ற உன்னதமான பணியில் நாங்கள் ஈடுபட்டிருந்தபோது,பெரும்பாலான மக்கள் மிக உறுதியாக எங்கள் வாக்கு நிச்சயம் உங்களுக்கு என்று சொன்னதை நம்பி நாங்கள் வெற்றி களிப்பில் இருந்தோம்.அனால் எதிர்கட்சியின் ஒரு சுயேச்சை வேட்பாளருக்கு இவ்வளவு ஆதரவுகளா! இவ்வளவு ஓட்டுகளா! என்று ஆச்சரியப்பட்டு அதற்க்கு வைக்கிறேன் பாரு வேட்டு என்று இரவென்றும் பாராமல்,நடுநிசி என்று பாராமல் கதவுகளை தட்டி வாரி இறைத்த நிகழ்ச்சி உண்மையிலேயே மனவேதனையை உண்டாக்கியது.
மனவேதனை எதற்காக? வாக்குகள் மாறிப்போகிறது என்பதற்காகவா? இல்லை!இல்லை! 
  • இலஞ்ச அச்சம்,இலஞ்ச கூட்சம் இவைகளை மரத்து அவைகளை நடைமுறை சர்வசாதாரணம் என்ற உணர்வில் இந்த மனிதம் முழுவதும் மாறி பாழாகிவிடக்கூடாது என்பதற்காக!
  • இலஞ்சம் சுவர்க்கத்திற்கு தடை என்ற இறை கோட்பாட்டால் அற்ப பதவிக்காக ஐவேளை தொழுகை,ஷரியத் இவைகளுடன் ஒழுகி வாழும் மனிதனுக்கு நாளைய நிரந்தர வாழ்வின் சொர்க்கம் கிடைக்காமல் போய்விடுமோ என்பதற்காக!
சிந்தித்து பார்க்கட்டும்.ஊருக்கு ஒரு மாற்றம் தேவை என்று கருதியவர்களுக்கு அது மாற்றமா அல்லது ஏமாற்றமா என்பதை யார் அறிவார்?
பணமா? பாசமா? பணம் முந்தியது! பாசம் பிந்தியது! பண மழையா? பாச மழையா?
பண மழை பெய்தது! பாசமழை பொய்த்தது!
எனவே எதிர் வரும் காலங்களிலாவது பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு கோடிகளை கொடுத்து தான் அதை பெற வேண்டும் என்ற அவல நிலையை மாற்றி அடிப்படை செலவுகளை மட்டும் செய்தும்,உள்ளாட்சி மன்ற தேர்தல் ஊர் சம்பந்தப்பட்டதால் ஜநாயக படுகொலையான,மார்க்கத்திற்கு உட்படாத பிரித்தலும் தெரு உணர்வு ஒழித்து ஊர் உணர்வு மிகைக்க யாரேனும் ஒரு நல்லவர்,வல்லவர் ஹராம்,ஹலால் பேணக்கூடிய எச்சூழலிலும் மனித நல் வாழ்வு சட்ட மீறாது நடப்பவர்,எவரோ அவர் அந்த இடத்தை பெறுவதற்கு நாம் இப்பொழுது முழு முயற்சி செய்வோம்.சிந்திப்போம் அதன் படி செயல் படுவோம்.முடிந்தால் எச்செலவுகளும் இல்லாத UN OPPOSED என்கிற எதிர்ப்பில்லா ஒரு மனதான தேர்வை உண்டாக்குவோம் .
மேலே சொன்ன 1142 வாக்குகள் பெற்று தந்த கண்ணியமிக்க வாக்காளர்களுக்கு மீண்டும்,மீண்டும் நன்றி! தேர்தல் அமைதியாக நடத்த ஒத்துழைத்த அனைத்து பொதுமக்களுக்கும் நன்றி.
வெற்றி என்பது இறைவன் பொருத்தத்துடன் கூடிய வெற்றியாக என்றென்றும் உண்டாகட்டுமாக. ஆமீன்.
உண்மை வெல்லும்! அமைதி வெல்லும்!! விவேகம் வெல்லும்!!!
                    உங்கள் உண்மையுள்ள,
            அ.அப்துல் முனாப் BA .,BL .,
 வழக்கறிஞர்,நோடறி பப்ளிக்,உறுதிமொழி ஆணையர் (Oath Commissioner) 
-------------------------------------------------------------------------------------------------------------
சிந்திக்க: மனதில் உறுதி செய்யப்பட்டு முத்திரையிடப்பட்ட வாக்குகள் மாயமானதற்க்கு காரணம் மனிதனா? இயந்திர கோலரா?
                       விடை: செய்தவன் அறிவான்.