Hot Posts

6/recent/ticker-posts

9.12 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு 2012 மார்ச்சுக்குள் இலவச லேப்டாப்..




   தமிழக அரசு சார்பில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவிகள் 9.12 லட்சம் பேருக்கு வரும் மார்ச் மாதத்துக்குள் இலவச லேப்டாப் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதிமுக அரசு பொறுப் பேற்றதும் தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த ஆகஸ்டில் நடந்த பட்ஜெட் கூட்டத்தில், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் அனைத்து பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவிகள் மற்றும் அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் இலவச லேப்டாப் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

இதையடுத்து, அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி திருவள்ளூரில் நடந்த விழாவில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். தற்போது, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் வரும் மார்ச் மாதத்துக்குள் முதல்கட்டமாக 9 லட்சத்து 12 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, 912 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்படத்தக்கது.