அதிரையில் பல நாட்களாக அறிவிக்கப்படாத மின் தடை செய்யப்படுகிறது.இது ஏன் என்று தெரியவில்லை.இதனால் அதிரை மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.பள்ளி மாணவ,மாணவிகளுக்கு இன்னும் சில மாதங்களில் தேர்வு நடைபெற உள்ளது.இந்த சமயத்தில் மின் தடை செய்தால் எப்படி அவர்கள் படிப்பார்கள்!!
ஏற்கனவே பள்ளிகள் அனைத்தும் 15 நாட்கள் தாமதமாகவே திறக்கப்பட்டது.இதனால் மாணவர்களுக்கு பாடங்கள் படிப்பதிலும்,புரிந்து கொள்வதிலும் சிரமம் ஏற்பட்டது.
இன்னும் சொல்ல போனால் அதிரையில் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை மின் தடை செய்கிறார்கள்.இது அறிவிக்கப்பட்ட மின் தடை.ஆனால் மாலை வேளையிலும் இதே போன்று 4 மணி முதல் 6 மணி வரை மின் தடை செய்கிறார்கள்.பின்பு மாணவர்கள் படிக்கும் இரவு நேரத்திலும் மின் தடை செய்கிறார்கள்.இப்படி இருக்கும் இவ்வேளையில் தேர்விற்கு மாணவர்கள் எப்படி தயாராக போகிறார்கள்?இதனை எல்லாம் கருத்தில் கொண்டு மின் தடையை சீர் செய்ய வேண்டும் என்பதே அதிரை மக்களின் எதிர்பார்ப்பு.
Social Plugin