Hot Posts

6/recent/ticker-posts

மருத்துவமனையாக மாறும் அண்ணா நூற்றாண்டு நூலகம்..

      புதிய தலைமை செயலகத்தை தொடர்ந்து, அண்ணா நூற்றாண்டு நூலகமும் ஆஸ்பத்திரி ஆகிறது. அண்ணா நூற்றாண்டு நூலகம், ‘குழந்தைகள் நல உயர் சிறப்பு மருத்துவமனை’யாக மாற்றப்பட உள்ளதாக முதல்வர் ஜெயலலிதா நேற்று அறிவித்தார். கடந்த திமுக ஆட்சியின்போது சுமார் ரூ.1000 கோடி மதிப்பில் அண்ணா சாலையில் மிக பிரம்மாண்டமாக புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை வளாகம் கட்டப்பட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும், புனித ஜார்ஜ் கோட்டையிலேயே தலைமைச் செயலகம் இயங்கும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். புதிதாக கட்டப்பட்ட தலைமைச் செயலகத்தில் ‘பல்துறை உயர் சிறப்பு மருத்துவமனை’ அமைக்கப்படும் என்று கடந்த ஆகஸ்ட் 18 ம் தேதி   சட்டப்பேரவையில் ஜெயலலிதா அறிவித்தார். இப்போது, கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம், டிபிஐ வளாகத்துக்கு மாற்றப்படும் என்றும், அந்த இடத்தில் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். 
இதனால் தமிழக மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.மருத்துவமனை எங்கு வேண்டுமானாலும் கட்டி கொள்ளலாம்.இதற்காக மாணவர்கள் ஆர்வமாக வந்து படிக்கும் நூலகத்தை மருத்துவமனையாக மாற்றுவது முறையற்றது என தமிழக மக்கள் கூறிவருகின்றனர்.
அமெரிக்க அதிபர் ஹிலாரி கிளிண்டன் இதனை சென்னை வரும்பொழுது பார்வையிட்டு ஆச்சரியப்பட்டார்.இதனை தான் ஜெயலலிதா மருத்துவமனையாக மற்ற போகிறார்.
இதே போன்று தான் சமச்சீர் கல்வி குழப்பமும்.எதை எல்லாம் கலைஞர் நடைமுறைக்கு கொண்டு வந்தாரோ அதனையெல்லாம் முதலமைச்சர் ஜெயலலிதா தடை செய்து வருகிறார்.
  • புதிய தலைமைச் செயலகம் கோட்டைக்கு மாற்றம்.
  • செம்மொழி நூலகம் மாற்றம்.  
  •  மற்ற அண்ணா பல்கலைக் கழகங்கள் மூடல்.
  •  தொல்காப்பியர் பூங்கா முடக்கம்.
  •  சென்னை புறநகர் காவல் துறை ஆணையரகம் ரத்து.
  •  செம்மொழிப் பூங்காவின் பெயர்ப் பலகை மறைப்பு.