கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை கிரிக்கெட் பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் ஆக பணியாற்றி பாகிஸ்தான் அணியினை அரையிறுதி வரை அழைத்து சென்ற ரசிகர்களிடையே செல்லமாக அழைக்கப்படும் பூம்,பூம் என்கிற அப்ரிடி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மனாக இருந்த இஜாஸ் பட் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அப்ரிடியை அப்போது கிரிக்கெட் வாரிய சேர்மனாக பணியாற்றிய இஜாஸ் பட் அப்ரிடியை அணியை விட்டு காரணமின்றி விலக்கினார்.இதனை சற்றும் எதிர்பாராத அப்ரிடி கிரிக்கெட் வாரியத்திடம் முறையிட்டார்.கிரிக்கெட் வாரியத்திடம் சரியாக எந்த பதிலும் கிடைக்காததால் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.பிறகு அணியின் சேர்மனாக இருக்கும் இஜாஸ் பட் தலைமையின் கீழ் விளையாட முடியாது வேறொரு புதிய சேர்மன் வந்தால் அணிக்கு நான் தாராளமாக என் பணியினை செய்வேன் என்று திட்டவட்டமாக அறிவித்தார்.
இதன் பின்பு தற்பொழுது பாகிஸ்தான் அணியின் புதிய சேர்மனாக சகா அஷ்ரப் பொறுப்பேற்று உள்ளதை தொடர்ந்து மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார் அப்ரிடி.இதே போன்று வேகபந்து வீச்சாளரும்,ஆல்ரவுன்டருமான அப்துல் ரசாக் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இருவரும் தற்போது நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
Social Plugin