Hot Posts

6/recent/ticker-posts

இழிவுபடுத்தும் அமெரிக்கா..


   அன்பார்ந்த சகோதர,சகோதரிகளே பொதுவாகவே நம் முஸ்லிம் சகோதரர்கள் விமான நிலையத்திற்கு சென்றாலே பல சோதனைகளில் ஈடுபடுகிறார்கள்.கேட்டால் அவர் தாடி வைத்திருக்கிறார்,இவர் மீது சந்தேகமாக உள்ளது என பல சோதனை.
 இதே போல தான் நம் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமிடம், நியுயார்க் விமான நிலையத்தில் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் 2 முறை சோதனை நடத்தி அவமதிப்பு செய்து இழிவுபடுத்தி வருகிறது.. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், அமெரிக்காவில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கடந்த செப்டம்பரில் சென்றார். அங்கிருந்து அவர் செப்டம்பர் 29ம் தேதியன்று ஏர்&இந்தியா விமானத்தில் இந்தியா திருப்பியிருக்கிறார்.
நியுயார்க்கில் உள்ள விமான நிலையத்தில் அவரிடம் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். அவரது ஆடைகளை தடவிப் பார்த்து, ஆயுதம் உள்ளதா என சோதனையிட்டனர்.முஸ்லிம்களாக இருந்தால் பெரும்பாலும் இந்த சோதனையை நடைபெறுகிறது.
முஸ்லிம்கள் என்றால் தீவிர சோதனையில் ஈடுபடுவதா?
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி கலாம் போன்ற உலகம் முழுவதும் அறியப்பட்ட மிக முக்கியப் பிரமுகர்களை சோதனையிடுவது கிடையாது.
ஆனால், கலாமிடம் சோதனை நடத்திய விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அத்துடன் விடவில்லை. அவர் விமானத்தில் ஏறி அமர்ந்த பின்பு மீண்டும் அவரை சோதனை செய்ய முயன்றனர். இதற்கு ஏர்&இந்தியா அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், கலாம் எந்த ஆட்சேபணையும் கூறவில்லை. இதன்பின், அவரது ஷூக்களையும், கோட்&ஜாக்கெட்டையும் வாங்கிச் சென்று அவற்றை சோதனையிட்டு விட்டு, பின்னர் திருப்பி கொடுத்தனர். இதன் பிறகு அமெரிக்கா மன்னிப்பு கேட்டுள்ளது.
இப்படி தான் இழிவுபடுத்தி,இழிவுபடுத்தி மன்னிப்பு கேட்பதா?
ஏற்கனவே,கடந்த
2009 -ல் டெல்லியில் அமெரிக்காவின் கான்டினென்டல் ஏர்லைன்ஸ் அதிகாரிகள், கலாமிடம் இதே போல் சோதனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண முஸ்லிமாகிய நமக்கு?
 சிந்தியுங்கள்!!!