கணித பாடத்தில் மந்த நிலையில் உள்ள மாணவர்கள் எளிதில் தேர்ச்சி பெறும் வகையில் சிறப்பு பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தில் 10ம் வகுப்புக்கான ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்கள் மிகவும் கடினமாக இருப்பதாக மாணவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதனால், ஏப்ரல் மாதம் தொடங்க உள்ள எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில், இந்த பாடங்களில் தேர்ச்சி விகிதம் குறைய வாய்ப்பு இருப்பதாக ஆசிரியர்கள் மற்றும் முதன்மை கல்வி அலுவலர்கள் தரப்பில் பள்ளிக்கல்வி துறையின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து ஆங்கிலம், கணிதம் பாடங்களில் மந்த நிலையில் உள்ள மாணவர்களுக்கு தினமும் பள்ளியில் சிறப்பு பயிற்சி அளிக்க, ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தேவைப்பட்டால் அனைத்து மாணவர்களுக்கும் மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது. இது குறித்து அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:
எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு இதுவரை நடத்தப்பட்ட பருவத்தேர்வு, காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. கணித பாடத்தில் 40 சதவீத மதிப்பெண்ணுக்கும் குறைவாக பெற்ற மாணவர்களை மட்டும் தனியாக பிரித்து, அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தில் 10ம் வகுப்பு ஆங்கிலம், கணிதம் பாடங்கள் கடினமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால், எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில், இந்த பாடங்களில் தேர்ச்சி விகிதம் குறையலாம் என்று ஆசிரியர்கள் தரப்பில் கல்வித் துறையின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
ஆங்கிலம், கணிதம் பாடங்களில் பின்தங்கி உள்ள மாணவர்களுக்கு தினமும் பள்ளியில் சிறப்பு பயிற்சி அளிக்க பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
தேர்வு வினாத்தாள் 40 சதவீதம் கடினமாக இருக்குமாம். அதனால், தேர்வுக்கு கட்டாயமாக கேட்கப்படும் பாடப் பகுதிகளில் மாணவர்கள் கூடுதல் கவனம் செலுத்த சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.
Social Plugin