பிளஸ் 2 தேர்வு மார்ச் 1-ல் தொடங்க உள்ளது. இதற்கான உத்தேச அட்டவணை தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுக்கான கால அட்டவணையை அரசு தேர்வுத்துறை வெளியிடுவதற்கு முன்பாக உத்தேசமான அட்டவணையை அரசின் ஒப்புதலுக்கு தயாரித்து அனுப்புவது வழக்கம். அந்த வகையில் பிளஸ் 2 தேர்வுக்கான உத்தேச தேர்வு அட்டவணை தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில், பிளஸ் 2 தேர்வு மார்ச் 1ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு தேர்வுக்கும் 2 நாட்கள் இடைவெளிவிட்டு தேர்வுகள் நடைபெறுகிறது. மாணவர்கள் படித்து அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக அரசு தேர்வுத்துறை இயக்ககம் இந்த இடைவெளியை அளித்துள்ளதாக கூறப்படுகிறது. தேர்வுத்துறை தயாரிக்கும் உத்தேச அட்டவணையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது. அதனால், இந்த உத்தேச அட்டவணைக்கு ஒப்புதல் அளித்து ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. மார்ச்சில் தொடங்க உள்ள பிளஸ் 2 தேர்வை மொத்தம் 7 லட்சத்து 63 ஆயிரத்து 124 பேர் எழுதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Social Plugin