ராமேசுவரத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. மேலும் சூறாவளி காற்றும் வீசியது. இதனால் கடலில் உயரமான அலைகள் எழுந்தது. 45 கிலோ மீட்டர் முதல் 55 கிலோமீட்டர் வரை தொடர்ந்து சூறாவளி காற்று வீசி வருகிறது.
இதையடுத்து மீன்துறையால் மீனவர்களுக்கு வழங்கப்படும் டோக்கன் கடந்த 2 நாட்களாக வழங்கப்படவில்லை. தொடர்ந்து இன்று காலையும் கடல் கொந்தளிப்பாகவே காணப்படுகிறது.
மீன்வளத்துறை அதிகாரிகள் கூறும்போது, இன்றும் கடல் கொந்தளிப்பாகவே காணப்படுகிறது. 45 கிலோ மீட்டரில் இருந்து 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே இன்று கடலுக்கு மீன்பிடிக்க மீனவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவித்து உள்ளனர். இதனால் இன்று பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரையில் ஓய்வெடுத்து வருகிறது.
இதுகுறித்து மீனவர்கள் கூறும்போது, கடந்த சில நாட்களாக சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்கக்கோரி தொடர் போராட்டம் நடத்தினோம். இந்நிலையில் தொடர்ந்து கடலில் காற்று வீசி வருவதால் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியவில்லை. இது போன்று அடிக்கடி மீன்பிடிக்க முடியாததால் எங்களது குடும்ப நிலைமை மிகவும் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது என்று கண்ணீர் மல்க கூறினர்.
Social Plugin