Hot Posts

6/recent/ticker-posts

முல்லை பெரியாறு பிரச்சனையால் கேரளாவுக்கு பயணிகள் இன்றி காலியாக செல்லும் பஸ்கள்..


 
 முல்லைப் பெரியாறு பிரச்சினை காரணமாக கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து செல்லும் வாகனங்கள் அடித்து நொறுக்கப்படுகிறது. இதனால் இரு மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து தடைபட்டுள்ளது.
 
இதை தொடர்ந்து தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்ல மக்கள் அச்சப்படுகின்றனர். சென்னை கோயம்பேட்டில் இருந்து கேரளாவில் உள்ள திருவனந்தபுரம், எர்ணாகுளம், பம்பை உள்ளிட்ட நகரங்களுக்கு அரசு விரைவு பஸ்கள் இயக்கப்படுகின்றன.  
 
கேரளாவில் தமிழக வாகனங்கள் வழிமறித்து தாக்கப்படுவதால் பஸ்சில் செல்ல மக்கள் அச்சப்படுகின்றனர். இதனால் கேரளாவுக்கு செல்லும் பஸ்கள் அனைத்தும் பயணிகள் இன்றி காலியாக செல்கின்றன. கேரளா செல்லும் பஸ்களில் 2 அல்லது 3 பயணிகளே செல்கின்றனர். அவர்களும் தமிழகத்தில் பாதி வழியில் இறங்குபவர்கள் ஆவர்.  
 
தற்போது சபரிமலை சீசன் என்பதால் பம்பைக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பஸ்களை இயக்கி வருகிறது. ஆனால் கேரளாவில் தமிழக அய்யப்ப பக்தர்கள் தாக்கப்படுவதால் அங்கு செல்ல அச்சம் நிலவி வருகிறது.
 
எனவே, சபரிமலைக்கு மாலை போட்ட அய்யப்பப் பக்தர்கள் தமிழக கோவில்களில் இருமுடியை செலுத்தி விட்டு விரதத்தை முடித்து வருகின்றனர். பயணிகள் இன்றி பஸ்கள் காலியாக செல்வதால் போக்குவரத்து கழகத்துக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.