Hot Posts

6/recent/ticker-posts

பிலிப்பைன்சில் சூறாவளிக்கு பலியான 700 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் புதைப்பு!



 பிலிப்பைன்சில் கடந்த சில நாட்களுக்கு முன் பயங்கர சூறாவளி காற்று வீசியது. பலத்த மழை பெய்ததில் பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின. ரயில், பஸ் போக்குவரத்து முடங்கியது. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மரங்கள் முறிந்து விழுந்தன, கட்டிடங்கள் நொறுங்கின. வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் பிலிப்பைன்சில் லட்சக்கணக்கான மக்கள் வாழ்க்கை ஸ்தம்பித்தது. மழை வெள்ளத்தில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மீட்கப்பட்ட 700 பேரின் உடல்கள் நேற்று ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டன. அவற்றில் பல உடல்கள் அடையாளம் காணப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்,பல உடல்கள் அழுகிவிட்டன. தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. மக்கள் நலனுக்காக வேறு வழியின்றி உடல்களை உடனடியாக புதைத்துவிட்டோம் என்றனர். இதற்கிடையில் 800க்கும் அதிகமானோர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாக செஞ்சிலுவை சங்கத்தினர் கூறியுள்ளனர்.