Hot Posts

6/recent/ticker-posts

டிரான்ஸ்பார்மர் வெடித்ததால் தூத்துக்குடியில் மின் உற்பத்தி நிறுத்தம் தமிழகத்தில் மின்வெட்டு அதிகரிக்கும்..

  
  தமிழகத்தில் ஏற்கனவே மின் வெட்டால் மக்கள் அதிருப்தியில் உள்ள நிலையில் மீண்டும் மின் வெட்டு அதிகரிக்கும் என தகவலால் மக்கள் சோகத்தில் ஆழ்ந்து உள்ளனர்.
  கயத்தாறில் ‘பவர்கிரிட்’ டிரான்ஸ்பார்மர் வெடித்ததால் தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் 2 யூனிட்களில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதை பழுதுபார்க்க பல மணி நேரம் ஆகும் என்பதால் தமிழகம் முழுவதும் இன்று மின்வெட்டு நேரம் அதிகரிக்கும். தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் தலா ஒவ்வொரு யூனிட்டிலும்  உற்பத்தி செய்யப்படும் 210 மெகாவாட் மின்சாரம் கயத்தாறு பவர்கிரிட் டிரான்ஸ்பார் மருக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு பிரித்து அனுப்பப்படுகிறது. இன்று காலை திடீரென்று கயத்தாரில் டிரான்ஸ்பார்மர் வெடித்ததால், தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில்   1 மற்றும் 2 வது யூனிட்களில் மின்உற்பத்தி தானாகவே நின்றது. கயத்தாறு டிரான்ஸ்பார்மரை பழுதுபார்க்க குறைந்தது பல மணி நேரம் ஆகும் என்று கூறப்படுகிறது.

ஒவ்வொரு யூனிட்டிலும் தலா 210 மெகாவாட் வீதம் 1 மற்றும் 2வது யூனிட்களில் 420 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மின்சாரம் தமிழகம் முழுவதும் அனுப்பப்படுகிறது. எனவே இந்த 2 யூனிட்களிலும் மின் உற்பத்தி நின்றதால் தமிழகத்தில் இன்று மின்வெட்டு நேரம் அதிகரிக்கும். ஏற்கனவே தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் 3வது யூனிட்டில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் அதில் 210 மெகாவாட் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

S.உதுமான் கனி தூத்துகுடியிலிருந்து செய்திகள் தந்தமைக்கு நன்றி..!