தமிழக அரசின் பால் விலை மற்றும் பஸ் கட்டண உயர்வை கண்டித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் எதிரில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.மாநில தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் தலைமை வகித்து பேசுகையில், ‘‘தமிழக அரசின் இந்த அதிரடி விலை ஏற்றத்தால் ஒரு மாதத்துக்கு ஒரு குடும்பத்துக்கு ரூ.2 ஆயிரம் அதிகமாக செலவாகும்.மத்திய அரசு நிதி தர மறுப்பதாக தற்போது கூறும் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கேட்டதை விட அதிக நிதி கொடுத்ததற்காக மத்திய அரசுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்தது எப்படி? தமிழக மக்கள் மீதான இந்த கட்டண சுமையை முதல்வர் உடனே வாபஸ் பெற வேண்டும்’’ என்றார்.ஆர்ப்பாட்டத்துக்கு பொதுச் செயலாளர் முகமது அபுபக்கர், மாவட்ட தலைவர் ஜெய்னுலாபுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநில நிர்வாகிகள் கமுதி பஷீர், காயல் மகபூப், நிஜாமுதீன், மண்ணடி இஸ்மாயில் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
நன்றி!
M.இத்ரீஸ் அஹமது
Social Plugin