Hot Posts

6/recent/ticker-posts

வேலைவாய்ப்பு அள்ளி தரும் படிப்புகள் !



 எவர்கிரீன் துறையாக மாறிவிட்ட கம்ப்யூட்டர் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைகளில் வேலைவாய்ப்புக்கு பஞ்சமே கிடையாது. இத்துறையில் இன்ஜினியரிங் இளநிலை, முதுநிலை பட்டம் பெறுபவர்களுக்கு உடனடி பணிவாய்ப்பு இருக்கிறது.இதுதவிர கம்ப்யூட்டர் கிராபிக்ஸ், கம்ப்யூட்டேஷனல் பிராப்ளம்ஸ், புரோகிராமிங், குறிப்பிட்ட பிரச்னைகளுக்கு குறிப்பிட்ட சாப்ட்வேரில் அளிக்கப்படும் தீர்வுகள், மனிதர் மற்றும் கம்ப்யூட்டர் தொடர்புகள், அல்கரிதம், டேட்டா அமைப்பு, கம்ப்யூட்டர் ஆர்க்கிடெக்சர், சாப்ட்வேர் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் நெட்வொர்க், மைக்ரோபிராசஸர் என்று ஏராளமான பிரிவுகளிலும் வேலைவாய்ப்புகள் குவிந்துள்ளன.

  • மருத்துவத்துறை வேலைவாய்ப்புகளில் தற்போது மவுசு அதிகரித்துள்ள படிப்பு சைட்டோ டெக்னாலஜி. மனித செல்களை ஆராய்ந்து நோய்க்கான காரணத்தை கூறுவதுதான் சைட்டோ டெக்னாலஜிஸ்டின் வேலை. உயிரியல், வேதியியல், மனித உடற்கூறு இயல் குறித்து சைட்டோ டெக்னாலஜியில் படிக்கலாம். தர மேம்பாடு, ஆய்வக நிர்வாகம் போன்ற துறைகளிலும் இவர்களின் பங்களிப்பு தேவைப்படுகிறது. பொறுப்புகள் அதிகமுள்ள துறையை விரும்புவோர் சைட்டோ டெக்னாலஜி படிக்கலாம். படிப்பை முடித்தவுடன் நல்ல ஊதியத்துடன் மருத்துவத்துறைகளில் வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன.
  • உடனடி வேலைவாய்ப்பை அளிப்பதில் கெமிக்கல் இன்ஜினியரிங் துறை முன்னிலையில் உள்ளது.  வேதியியலுடன் கணித அறிவும் கெமிக்கல் இன்ஜினியரிங் படிப்புக்கு அவசியம். பெரிய தொழிற்சாலைகளில் உற்பத்தி மற்றும் பராமரிப்பு பொறுப்புகளை கெமிக்கல் இன்ஜினியர்களுக்கு வழங்குகின்றனர். டிடர்ஜென்ட், எரிபொருள், பிளாஸ்டிக், மருந்துப்பொருட்கள் தொடர்பான ஆராய்ச்சியில் இவர்களது பங்களிப்பு அதிகம். செலவை குறைத்து உற்பத்தியை அதிகரிப்பது, தரக்கட்டுப்பாடு போன்றவையும் கெமிக்கல் இன்ஜினியர்களின் பணிதான். மெட்டீரியல் சயின்ஸ், உணவு உற்பத்தி, சுற்றுச்சூழல் ஆராய்ச்சி, நிர்வாகம், விற்பனை துறைகளை இவர்களால் கையாள முடியும்.