உலக பொருளாதார மயமாக்கலின் காரணமாக கடந்த 20 ஆண்டுகளில் உலக வணிகம் பெரிய மாற்றங்களை சந்தித்து வருகிறது. உலக சந்தை யில் தினமும் புதிய பொருட்களின் வரத்து என்பது சாதாரணமாகிவிட்டது. வாடிக்கையாளர்களின் தேவையை அடிப் படையாக கொண்டு உற்பத்தி மாற்றங்களும் மலிந்துவிட்டன. விரிவடைந்த சந்தை மற்றும் பலவிதமான தயாரிப்புகள் போன்றவை இன்றைய உலக சந்தையின் அம்சங்களாய் மாறிவிட்டன. வேலைவாய்ப்பிலும் இத் துறை சார்ந்த படிப்பு களை முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
இதனால் சமீப கால மாக இந்திய இளைஞர்களின் பார்வை எம்பிஏ படிப்பு களை நோக்கி திரும்பியுள் ளது. கல்லூரி, பல்கலைக் கழகங்களி லும் வணிகம் தொடர்பான பல்வேறு பாடப்பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சர்வதேச வணிகம் தொடர்பான எம்பிஏ படிப்புக்கு மாணவர்கள் மத்தியில் கிராக்கி அதிகரித்துள்ளது. படித்து முடித்தவுடன் கைநிறைய ஊதியத்துடன் உலக அளவிலான தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் நிறைய வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன. சர்வதேச அளவிலான வங்கிகள், நிதித்துறை நிறுவனங்கள், நிதிப் பாதுகாப்பு நிறுவனங்கள், முதலீட்டு நிறுவனங்கள், ஏற்றுமதி இறக்குமதி நிறுவனங்கள் மற்றும் சர்வதேச வணிக ஆலோசனை மையங்களிலும் பணிவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.
முக்கியமாக ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. சர்வதேச வணிகம் பெரும்பாலும் கடல் மற்றும் வான்வழியே நடப்பதால், சர்வதேச வணிகத்தில் எம்.பி.ஏ. முடித்தவர்கள் விமானத்துறை மற்றும் கப்பல் துறைகளில் அபரிமிதமான பணிவாய்ப்பை பெறுகிறார்கள். சொந்தமாக ஆலோசனை மையங்களை நிறுவியும் நல்ல வருமானம் பெறலாம்.
- சர்வதேச வணிகம் தொடர்புடைய எம்பிஏ படிப்புகளில் சில *International Market Research * International Marketing * Export/Import Management * Merchandising * Domestic/International Logistics * Shipping * Export/Import Documentation.
Social Plugin