Hot Posts

6/recent/ticker-posts

அதிரையில் பரவும் எலிகாய்ச்சல் ?

உஷார் நிலையில் சுகாதாரத்துறை !!

கடந்த சில நாட்களாக அதிரையில் மர்ம நோய் பரவல் ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் சுகாதர்துரைக்கு புகார் தெரிவித்தனர். இதனையடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட இருவரை சோதனை செய்ததில் இவர்களுக்கு எலி காய்ச்சல் நோய் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது  

எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இருவருக்கும் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு ர் தற்போது நலமுடன் உள்ளனர். வேறு யாருக்கும் பாதிப்பு உள்ளதா என சுகாதாரத்துறை துணை இயக்குநர் மதிவாணன் உத்தரவின்பேரில்  முகாமிட்டு ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

பொதுமக்கள் நீர்தேக்கத் தொட்டிகள் மற்றும் குடிநீர் இணைப்புக்குழாய் ஆகியவற்றை ஆய்வு செய்து தண்ணீரில் குளோரின் போடுகின்றனர். காய்ச்சி வடிகட்டிய தண்ணீ ரையே குடிக்க வேண்டும் என்று மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். 

மேலும், எலிக்காய்ச்சல் பரவாமல் இருப்பதற்காக அதிராம்பட்டினத்தில் உள்ள 21 வார்டுகளிலும் சுகாதாரத்துறையினர் வீடு வீடாக சென்று ஆய்வு மேற் கொண்டு வருகின்றனர் என்றார். 
இதற்க்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என கேட்டு கொள்ளபடுகிறது .