Hot Posts

6/recent/ticker-posts

பிளஸ்2-வில் 50% எடுத்தாலே எம்பிபிஎஸ் படிக்கலாம்!!


தமிழகத்தில் பள்ளி இறுதிப்படிப்பை முடிக்கும் மாணவ, மாணவிகளின் முழு முதற்கனவு எம்பிபிஎஸ் படிப்புதான். கட்-ஆப் மதிப்பெண், இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதால் பலருக்கு இப்படிப்புக்கான வாய்ப்புகள் கிடைப்பதில்லை. இங்குள்ள மருத்துவக்கல்லூரிகளில் போதிய சேர்க்கை இடங்களும் இல்லை. 

வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ், பி.பார்ம், பிஏஎம்எஸ் படிப்புகளுக்கு 2012ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள் ளது. ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களை கொண்ட பிளஸ்2 பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொதுப்பிரிவு மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் 50 சதவீத மதிப்பெண்களும், எஸ்சி, எஸ்டி, ஓபிசி மாணவர் கள் 40 சதவீத மதிப்பெண்களு டன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்படும்.

அகில இந்திய தகுதித்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். காலியிடங்கள் மத்திய அரசு விதிமுறைப்படி நிரப்பப்படும். எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தகுதித் தேர்வு இரண்டு கட்டங்களாக வும், பிஏஎம்எஸ், பி.பார்ம் படிப்பு களுக்கு ஒரே கட்டமாகவும் நடைபெறும். எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு மே16ம் தேதி, பிஏஎம்எஸ், பி.பார்ம் படிப்புகளுக்கு ஜூன் 17ம் தேதி தகுதித்தேர்வு நடைபெற உள்ளது. வாரணாசி, டெல்லி, கொல்கத்தா, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் இத்தேர்வு நடைபெறும். விண்ணப்பக்கட்டணமாக ரூ.1600 (எஸ்சி, எஸ்டி பிரிவின ருக்கு ரூ.1100) ‘The Director, Institute of Medical Sciences, BHU, Varanasi’ என்ற முகவரிக்கு குறுக்கு கோடிட்ட டிடியாக செலுத்த வேண்டும். டிடியின் பின்புறம் விண்ணப்பதாரர் பெயர், முகவரியை குறிப்பிட வேண்டும். கட்டண டிடி, கோரிக்கை கடிதம், சுயமுகவரியிட்ட 2 வெள்ளைத் தாள் ஆகியவற்றுடன் ‘The Director (PMTCell), Institute of Medical Sciences, Banaras Hindu University, Varanasi 221005’ என்ற முகவரிக்கு அனுப்பி வரும் பிப்.27ம் தேதிக்குள் தபாலில் விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மார்ச் 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களை www.bhu.ac.in என்ற இணைதளத்தில் அறியலாம்.