Hot Posts

6/recent/ticker-posts

ஈராக் : சதாம் ஆட்சிக்கு பின்னர் 4000 பெண்கள் கடத்தல்.

ஈராக்கில் சதாம் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதன் பின்னர் ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் நோக்கத்திற்காக அண்டை நாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளனர் .

மத்தியகிழக்கில்கல்விக்கானசமூகமாற்றம் (Social Change For Education In The Middle East) என்ற அமைப்பினால் நடத்தப்பட்ட ஆய்வின் மூலமே தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆய்வறிக்கையின் படி 2003 ஆம் ஆண்டின்  பின்னர் அதாவது அமெரிக்க படையினர் ஈராக்கில் நுழைந்ததற்கு பிறகு இது வரை சுமார் 4000 பெண்கள் காணமல் போயுள்ளனர் என்கிறது அந்தஅமைப்பு .

மேலும் குற்ற செயல்களில் ஈடுபடும் குழுக்களே இவ்வாறான கடத்தல்களில் ஈடுபடுவதாகவும் சில பெண்கள் குடும்பத்தவர்களாலேயே விற்பனை செய்யப்படுவாதவும் அவ்வமைப்பின் ஆய்வில் தெரிய வருகிறது.