Hot Posts

6/recent/ticker-posts

தானே புயல் காரணமாக கரும்பு வரத்து குறைவு:ஒரு கட்டுக்கு ரூ;200 நிர்ணயம்..



 பொங்கல் பண்டிகை நெருங்குவதையொட்டி கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கரும்பு வரத்தொடங்கியுள்ளது. வழக்கமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கடலூர் மாவட்டம் சிதம்பரம், சேத்தியா தோப்பு மற்றும் சேலம், மதுரை மேலூர், தேனி ஆகிய இடங்களில் இருந்து கரும்பு வரும்.

கடந்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு முன்பு தினமும் 10 லாரிகளில் கரும்பு வந்தது. ஆனால் சமீபத்தில் தாக்கிய தானே புயலால் கடலூர் மாவட்டம் சிதம்பரம், சேத்தியாத்தோப்பு ஆகிய இடங்களில் கரும்பு தோட்டங்கள் அழிந்தன. இதனால் இங்கிருந்து கரும்பு வரத்து அடியோடு பாதிக்கப்பட்டது. மதுரை மேலூர், தேனி, சேலம் ஆகிய இடங்களில் கரும்பு விளைச்சல் குறைந்தது.

இதனால் இந்த ஆண்டு கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கரும்பு வரத்து மிகவும் குறைந்தது. தற்போது தினமும் 1 லாரி மட்டுமே கரும்பு வருகிறது. கடந்த வருடம் 20 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ. 400 முதல் ரூ. 500 வரை விற்பனையானது. இந்த ஆண்டு தற்போது ரூ. 200-க்கே விற்கப்படுகிறது. கரும்பு வரத்து குறைவு ஒரு புறம் இருக்க அந்த கரும்பையும் வாங்க கோயம்பேட்டில் ஆள் இல்லை.

இதே போல அதிரையிலும் கரும்பு வரத்து குறைந்துள்ளது.

8-ந்தேதிக்கு பிறகு கரும்பு விலை அதிகரிக்கத் தொடங்கிவிடும் என்று தெரிகிறது. தற்போது சில்லறை கடைகளில் ஒரு கரும்பு ரூ. 20-க்கு விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.