பூந்தமல்லி, கரையான்சாவடி உள்ளிட்ட பகுதியில் மழைநீருடன் கழிவுநீர் கலந்துவிட்டதால் நோய் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. சென்னை, புறநகர் பகுதியில் 2 நாளாக நல்ல மழை பெய்தது. பூந்தமல்லி வெள்ளக்காடாக மாறியது. எம்ஜிஆர் நகர், 1,2,3வது தெருக்கள், முருகப்பிள்ளை தெரு, 7வது வார்டில் எம்.எஸ்.வி. நகர், சின்னப்பா நகர், பொன்னியம்மன் நகர், 9வது வார்டில் கக்கன் தெரு, குமணன்சாவடி, கரையான்சாவடி, 14வது வார்டில் கோரிமேடு, பாபாபி தர்கா, 12வது வார்டில் இந்திராணி நகர், துளசிதாஸ் நகர், போலீஸ் குடியிருப்பு, நகராட்சி துப்புரவு பணியாளர் குடியிருப்பில் மழைநீர் சூழ்ந்தது.இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமமுற்று வருகின்றனர்.
பூந்தமல்லி-ஆவடி சாலை, பூந்தமல்லி பிரதான சாலையை ஒட்டியுள்ள பொன்னியம்மன் கோயில் குளம், அறிஞர்அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி பகுதிகளில் மழைநீருடன் கழிவு நீரும் தேங்கி உள்ளது. இதனால் தொற்றுநோய் பரவும் ஆபத்து உள்ளது. இந்த பகுதியில் கடந்த மாதம் மழைநீர் தேங்கியபோது 50க்கும் அதிகமானவர்கள் வாந்தி, பேதியால் பாதிக்கப்பட்டனர். இதில் 4 பேர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சர்கள் மாதவரம் மூர்த்தி, ரமணா, மணிமாறன் எம்எல்ஏ ஆகியோர் நேற்று பார்வையிட்டு நீரை வெளியேற்ற உத்தரவிட்டனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. பூந்தமல்லி பேருந்து நிலையத்திலும் கழிவுநீர் தேங்கி உள்ளதால் நோய்கள் பரவும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நன்றி,
T.இம்ரான் கான்.
பூந்தமல்லியில் இருந்து செய்தி தந்தமைக்கு.
Social Plugin