Hot Posts

6/recent/ticker-posts

ஆங்கில பயிற்றுனராக வெளிநாட்டில் பணிபுரிய விருப்பமா?



 பெரும்பாலான நாடுகளில் ஆங்கிலம் தொடர்பு மொழியாக மாறிவிட்டது. இதனால் ஆங்கிலம் கற்பவர்களின் எண்ணிக்கை உலகளவில் அதிகரித்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை ஆங்கிலக்கல்வி முறை அசைக்கமுடியாத அளவுக்கு வேரூன்றி இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. ஆங்கிலம் கற்பிப்பவர்களுக்கான தேவையும் அதிகரித்திருக்கிறது. அடிப்படைக் கல்வியில் உள்ளதை போன்று ஆங்கிலம் கற்பிப்பது என்பது எளிதானது. ஆனால் உலகத்தரத்தில் வேலைவாய்ப்புகளுக்கு ஏற்ற ஆங்கிலத்தை கற்பிப்பதே இன்றைய சூழ்நிலையில் அவசியமும், தேவையு மாக இருக்கிறது. ஆங்கிலம் கற்பிக்க சரியான அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டவராக இருந்தால் மட்டுமே அவருக்கு விலை அதிகம்.

இந்த தகுதியை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் வழங்குகிறது. கற்பிப்பவர்களுக்கான அங்கீகாரத்தை வழங்கும் CELTA சான்றிதழ் தேர்வை  இப்பல்கலைக்கழகம் நடத்துகிறது. ஆண்டுதோறும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இப்பயிற்சியில் பங்கேற்கின்றனர். சிணிலிஜிகி சான்றிதழ் பெற விருப்பமுள்ளவர்கள் 20 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் படிக்க, பேச, கேட்க, எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும். 
இச்சான்றிதழ் பெற விண்ணப்பித்தால், தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு நான்கு வாரங்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். 

பயிற்சிக்கு தேர்வு பெற்றவர்கள் வெற்றி பெற்றதாக கருத முடியாது. ஏ, பி, சி தேர்ச்சி என மூன்று தரப்படுத்துதல்கள்  இருக்கின்றன. பயிற்சிக்கட்டணம் 11 ஆயிரம் ரூபாய். 130 நாடுகளில் 2700 மையங்களில் தேர்வு எழுத முடியும். சிணிலிஜிகி  சான்றிதழ் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படும் சான்றிதழ் என்பதால் நீங்கள் வெளிநாடுகளில்கூட ஆங்கில பயிற்றுனராக பணிபுரிய முடியும். இப்பயிற்சியை இந்தியாவில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் பெறலாம்.  

பி.பி.ஓ. மையங்கள், கல்வி நிறுவனங்களில் நல்ல பணிவாய்ப்பு கிடைக்கும். சிறந்த ஊதியத்தையும் பெறலாம். சொந்தமாக ஆங்கிலம் கற்பிக்கும் மையம் நடத்தலாம். இப்படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் மற்றும் கூடுதல் விவரங்களை www.britishcouncil.org/india education course detailscelt என்ற இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.