Hot Posts

6/recent/ticker-posts

காம்பீருக்கு கங்குலி அட்வைஸ்!!



ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் முன்னணி வீரரான காம்பீர் தடுமாறி வருகிறார். முதல் டெஸ்டில் 3, 13 ரன்கள் மட்டுமே எடுத்தார். 2வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் டக் அவுட்டானார். 
இதனால் அவர் மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகியுள்ளார்.இந்நிலையில் மாஜி கேப்டன் கங்குலி கூறுகையில், காம்பீர் மீண்டும் திணறியுள்ளார். 

2வது இன்னிங்சில் அவர் ரன் குவிக்கவில்லையென்றால் அணியில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்ற குரல் தான் ஒலிக்க துவங்கும்.இதனால் அவர் முழு கவனத்துடன் விளையாட வேண்டும். 

ஆஸ்திரேலியாவில் விளையாடும் போது அதிக அக்கரையுடன் ஆட வேண்டும். அது காம்பீரிடம் இல்லை. அவர் சிறந்த வீரர் தான். தலையை நோக்கி வரும் பந்தை எதிர்கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். காம்பீர் கடுமையாக போராட கூடிய வீரர். நிலைமைக்கு தகுந்தபடி தன்னை மாற்றிக்கொண்டு ஆட வேண்டும். பேட்டிங்கை வைத்து தான் அவரது வாழ்க்கை உள்ளது.

அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்ததால் தான் சேவாக்கால் சிறப்பாக ஆடமுடியவில்லை என நினைக்கிறேன். விக்கெட்டுகள் சரிய துவங்கியதால் அவரது மனநிலை பாதிக்கப்பட்டிருக்கும். முதல் டெஸ்டிலும் சச்சினுக்கு இதே நிலை தான் ஏற்பட்டது. முதல் இன்னிங்சையே இன்னும் நினைத்து கொண்டிருக்க கூடாது. ஆஸ்திரேலிய அணியை குறைந்த ரன்னில் சுருட்டி சிறப்பான இலக்கு கொடுக்க வேண்டும். 250 ரன்கள் இலக்கு கொடுத்தாலும் கடினமாகவே இருக்கும். நியூசி.க்கு எதிரான டெஸ்டில் இந்த இலக்கை கூட எடுக்க முடியாமல் ஆஸி. தோல்வியை தழுவியுள்ளது. அதே போன்ற ஒரு நிலையை நாமும் உருவாக்க வேண்டும் என்றார்.