Hot Posts

6/recent/ticker-posts

அளவில்லாத மின் தடையால் அவதியுறும் மாணவர்கள் !!!

அதிரையில் அறிவிக்கப்படாத மின் தடைகள் அதிகமாக ஏற்படுகிறது.

இதன் காரணமாக பள்ளி மாணவர்கள் குறிப்பாக அரசு பொது தேர்வை எழுதவுள்ள பத்தாம் வகுப்பு மாணவர்களும்,பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

காலை 6 மணி முதல் 8 மணி வரை மின் தடை ஏற்படுகிறது.இதனை தொடர்ந்து  மதியம் 12 மணி முதல் 2  மணி வரை மின் தடை செய்யப்படுகிறது.
இதன் பின்பு மாலை 6 மணி முதல் 6.45 மணி வரை மின் தடை ஏற்படுகிறது.இதனை தொடர்ந்து இரவு 8 மணி அல்லது 9 மணிக்கும் மின்தடை ஏற்படுகிறது .

இப்படி அதிரையில் குறைந்தது 4 மணி  நேரமாவது அறிவிக்கபடாத மின் தடை ஏற்படுகிறது.
மாணவர்கள் படிக்கும் நேரங்களில் இப்படி அடிக்கடி  மின் தடை கொண்டிருப்பதால்  அரசு பொது தேர்வை எழுதவுள்ள மாணவர்கள் நிலைமை மோசமடைய வாய்ப்புள்ளதாக கல்வியார்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இன்னும் அரசு பொது தேர்விற்கு 2 மாதங்களே உள்ளநிலையில் இப்படி அளவில்லா மின் தடை செய்தால் அவர்கள் எப்படி தேர்விற்கு தயாராவார்கள் என்ற அச்சம் பெற்றோர்களுக்கு உள்ளது .

இதனை எல்லாம் கருத்தில் கொண்டு அதிரை மட்டுமல்லாது பல ஊர்களிலும்  மின் தடையை குறைக்க வேண்டும்.மாணவர்களின் எதிர்காலத்திற்கு உதவ வேண்டும் என்று "அதிரை குரல்" வளைத்தளம் சார்பாக கேட்டு கொள்ளப்படுகிறது.