Hot Posts

6/recent/ticker-posts

இந்திய கிரிக்கெட் அணியினர் ஊர் சுற்ற செல்லவில்லை வீரர்கள் உணரவேண்டும்:கவாஸ்கர் ஆக்ரோஷம்!!


இந்த புத்தாண்டில் நமது இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தோல்வியுடன் ஆட்டத்தை துவங்கி உள்ளனர்.ஆஸ்திரேலியாவிற்கு முதலில் சென்று 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.முதல் டெஸ்ட் போட்டியில் அனைத்து வீரர்களுமே அரங்கில் சொதாப்பி தோல்வி கண்டனர்.இதன் பின்பு 2 வது டெஸ்ட் போட்டியிலும் தோல்வி கண்டுள்ளனர்.இதற்க்கு கேப்டன் டோனி தான் முழு முதற்க்  காரணம் என்று கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் வசைபாடி வருகின்றனர்.


இந்நிலையில் கவாஸ்கர் கூறுகையில், ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய வீரர்கள் போதுமான அளவு பயிற்சிகள் மேற்கொள்ளவில்லை. முதல் டெஸ்ட் போட்டி 4 நாட்களில் முடிந்தது. அதன்பிறகு கூட இந்திய வீரர்கள் பயிற்சியில் கவனம் செலுத்தவில்லை. மாறாக வெளியில் ஊர் சுற்றுவதிலேயே கவனம் செலுத்தியுள்ளனர். என்ன நினைப்பில்தான் வீரர்கள் உள்ளனர் என்பது தெரியவில்லை. 

வலுவான அணியை எதிர்கொள்ளும்போது அடுத்தடுத்து தொடர்ச்சியாக பயிற்சிகள் மேற் கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் மெத்தனமாக இருக்கிறார்கள். பிசிசிஐ யும் போதுமான பயிற்சி ஆட்டங்களுக்கு ஏற்பாடு செய்யவில்லை. அதிகளவிலான ஒருநாள் போட்களில் இந்திய அணி பங்கேற்கிறது. அதுவும் பந்துகள் எழும்பாத ஆடுகளங்களில்தான் நடக்கிறது. அப்படி ஆடிவிட்டு ஆஸ்திரேலிய ஆடுகளத்திற்கு தகுந்தவாறு உடனே பேட்டிங்கில் மாற்றம் செய்வது வீரர்களுக்கு சிரமம்தான்.

பிரவீன்குமார் உடல்தகுதியுடன் இருந்தால் அவரை விரைவில் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையை பிசிசிஐ எடுக்க வேண்டும். அவரது ஸ்விங் பந்துவீச்சு ஆஸி. ஆடுகளங்களில் நன்கு எடுபடும். சச்சினின் 100வது சதம் குறித்து மீடியாக்கள் அதிகம் பேசுவதை நிறுத்தி கொள்ள வேண் டும். இதனால் அவருக்கு கூடுதல் நெருக்கடிதான் ஏற்படுகிறது என்றார்.
இந்திய அணி வீரர்கள் கிரிக்கெட் விளையாட தான் ஆஸ்திரேலியா வந்துள்ளனர் ஊர் சுற்றுவதற்கு அல்ல என்பதனை அணி கேப்டனும்,சக வீரர்களும் உணரவும்.