Hot Posts

6/recent/ticker-posts

பின்னூட்டம் போடும் அதிரை புண்ணியவான்களே...

பாராட்டுக்கு மயங்காத மனிதர்களே கிடையாது. அதற்காக ஜால்ரா போடவேண்டும் என்பதில்லை. ஒவ்வொருவரும் பலவாறு சிந்தித்துத் தான் பதிவுகளை இடுகிறார்கள்.அதில் ஏதோ ஒரு குறிப்பு அல்லது ஏதோ ஒரு தகவல் நிச்சயமாக சிறப்பு உள்ளதாக இருக்கும். அதைப் பாராட்டலாமே. பாராட்டை பலமாக எல்லோருக்கும் கேட்கும்படிசொல்லலாம். அந்தப் பதிவை இட்டவருக்கும் ஒரு விட்டமின் மாத்திரை சாப்பிட்ட உற்சாகம். அடுத்த பதிவை இன்னும் சிறப்பானதாக செய்ய மேலும் முயற்சி செய்வார்.
நாம என்னதான் மாங்கு மாங்குனு பதிவுகள எழுதினாலும், படுபாவிங்க ஒரே ஒரு ஸ்மைலி போட்டுட்டு ஓடிட்றாங்க.. ஏதாவதொரு மொக்கை ஜோக் எழுதினாலும் அதே பின்னூட்டம் தான், அறிவியல், கவிதை, கதை முயற்சி, தகவல் களஞ்சியம்னு வேற பதிவுகள் எழுதினாலும் அதே ஒற்றை ஸ்மைலி பின்னூட்டம் தான். என்ன ஒண்ணு.. சந்தோசமான பதிவுனா சிரிக்கிற ஸ்மைலி, சோகமான பதிவுனா அழுகுற ஸ்மைலி.. அவ்ளோ தான்.

பின்னூட்டங்கள்ங்குறது பதிவெழுதுறவங்கள ஊக்கப்படுத்தி, அடுத்தடுத்து எழுதத் தூண்டுற விதமா அமையணும்.
அருமை, அற்புதம், சூப்பர்“னு சிலர் கமெண்ட் போடுவாங்க.. நாலு பக்கம் மாய்ந்து மாய்ந்து எழுதுனாலும் ஒரே வார்த்தைல “சப்“னு சொல்லிடுவாங்க. பதிவ படிக்கலனாலும், இல்ல அறைகுறையா படிச்சாலும் இந்த கமெண்ட் வந்துடும். எந்த ரயிலப் புடிக்க இப்டி அவசர கமெண்ட் போட்றாங்களோ தெரில ஆனால் அதிரையில் ரயில் இல்லை :-).
நமக்கு யார் தொடர்ந்து பின்னூட்டம் போட்றாங்களோ அவங்களோட ப்ளாக்குக்கு மட்டும் தான் போகணும்னு அதிராம்பட்டினம் வலைப்புக்கள் (Censored,Censored) பதிவர்கள் சபதம் எடுத்துக்குறாங்க. அப்டி போட்ற பின்னூட்டம் உருப்படியா இருந்தா கூட பரவாயில்ல.. ஏதோ கடமைக்கு நானும் பின்னூட்டம் போட்றேன்னு போடுவாங்க. பதிவ படிச்சாங்களா இல்லையானு அந்த கமெண்ட பாத்தாலே தெரியும்.
சிலர் பகிர்வுக்கு நன்றி, கலக்கல் பதிவு, வாழ்த்துக்கள்“னு வெறுமனே சொல்லிட்டுப் போவாங்க. அதுலயும் சிலர், பதிவுகளுக்கு பின்னூட்டம் போடாம தங்களோட ப்ளாக்குக்கு விளம்பரம் குடுத்துட்டுப் போவாங்க. இன்னும் சிலர், முந்தைய பின்னூட்டம் போட்ட தங்களோட நண்பர்கள் கிட்ட, மாமா மச்சினு அரட்டைய போட்டுட்டு போவாங்கசரி பேசுறது தான் பேசுறாங்க.. பதிவு பத்தின கருத்த சொல்லிட்டு பேசலாமே.. ம்ஹூம். அதிரை மக்களின் நேரம் வீனா போகுது.
அதிரை மக்களின் மனதுக்குள் தோன்றிய உணர்வானது, எழுத்தாய் கைகளின் வழியே பதிவாய் மாறுகிறது. பதிவர்களின் பதிவுகளை படிப்பது என்பது பலரின் நினைவுகளில் மிதப்பது போல. பலரின் உணர்வுகளை உணர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பாய் பதிவுகள் இருக்கின்றன. அதில் நல்லது எது, கெட்டது எது என்பதை பகுத்தறிவதெல்லாம் படிக்கும் வாசகனின் மன நிலையைப் பொறுத்தது. ஆன்னா அதிரை பெயர் வாச்சி சும்மா கதை அடித்து (Censored) பண்ணி (Censored) (Censored) என்னமோ நாம் தான் (Censored) புத்திசாலி டு. ஹ்ம்ம்.. 
பல நல்ல, சிறப்பான பதிவுகளுக்கும் வரும்போது நொந்துக்க வேண்டியதாயிருக்கு. எழுதப்படும் பதிவுகள் பற்றிய சரமாரியான விமர்சனங்கள், சண்டைகள் ஏற்படுத்துற உற்சாகமும் ஊக்கமும், இந்த மாதிரியான டெம்ப்ளேட் பின்னூட்டங்கள்ல அடிபட்டுப்போகுது.
இந்தப் பின்னூட்டங்கள் பிரதிபலிக்கும் கருத்தான “பதிவுகளுக்கு சரியான புரிதல்களோ, மதிப்புகளோ கிடைக்கப்படவில்லை“ என்பதை விட, பதிவுகள் படிக்கப்படாமல் இருக்கின்றன என்ற நிலை எவ்வளவோ பரவாயில்லையே.
இப்ப கூட பதிவ முழுசாப் படிக்காம, கடைசி பாராவ மட்டும் Copy and Paste பண்ணி
”// இந்தப் பின்னூட்டங்கள் ப்ரதிபலிக்கும் கருத்தான “பதிவுகளுக்கு சரியான புரிதல்களோ, மதிப்புகளோ கிடைக்கப்படவில்லை“ என்பதை விட, பதிவுகள் படிக்கப்படாமல் இருக்கின்றன என்ற நிலை எவ்வளவோ பரவாயில்லையே.//
அருமை“ ---------- அப்டினு ஒரே வரில கமெண்ட் போடுவாங்க..
ஹூம்ம்.. என்னத்த சொல்ல..
இது யார் மனதையும் புண்படுத்தவோ, அடுத்தவர்களை குறை சொல்லவோ, விமர்சிக்கவோஇந்தப்பதிவு இல்லை; எனது எண்ணங்களும் எனது முடிவுக்களும்தான் இந்தப்பதிவு.
அன்புடன் உங்கள் அதிரை ஜமீல் அஹமது.