ஏர் இந்தியா விமானத்தில் 1200 பைலட்கள் பணியாற்றுகின்றனர். இதில், 300 பேர் சீனியர் பைலட்கள். இவர்கள் அனைவரும் இன்று அதிகாலை முதல் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், ஏர் இந்தியா போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் இருந்து இன்று காலை 6.40 மணி, 9.30 மணிக்கு டெல்லி செல்ல வேண்டிய 2 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதில் பயணம் செய்ய வந்திருந்தவர்கள் காலை 8.45 மணிக்கு சாதாரண பைலட்கள் இயக்கும் ஏர் இந்தியா விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். இதுபோல், டெல்லியில் இருந்து காலை 8.50 மணிக்கு சென்னைக்கு வரவேண்டிய ஏர் இந்தியா விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
‘‘ஏர் இந்தியா நிறுவனம் ‘போயிங் 787’ என்ற அதிநவீன ரக 27 விமானங்களை வாங்குகிறது. இது, 260 இருக்கை கொண்டது. இந்த விமானங்களை சீனியர் பைலட்டுகளை வைத்து இயக்கவேண்டும். சீனியர் பைலட்டுகளுக்கு சம்பளம் அதிகப்படுத்த வேண்டும். குறிப்பிட்ட தேதியில் சம்பளம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இதை வலியுறுத்தி, சீனியர் பைலட்கள் வேலை நிறுத்தம் செய்கின்றனர். மற்ற பைலட்கள் பணியாற்றுவதால் விமான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்படவில்லை.
‘‘கடந்தாண்டு ஏப்ரல் மாதம் சாதாரண பைலட்கள் போராட்டம் நடத்தும்போது சீனியர் பைலட்கள் ஆதரவு கொடுக்கவில்லை. இதனால், தற்போது இவர்களது போராட்டத்துக்கு அவர்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை’’ என்று விமான போக்குவரத்து வட்டாரங்கள் தெரிவித்தன.
Social Plugin