Hot Posts

6/recent/ticker-posts

சீனியர் வீரர்கள் நன்றாக விளையாடாவிட்டால் தூக்கி எறியுங்கள்:கபில்தேவ் தடாலடி!!



 ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் இந்திய அணி படுமோசமாக ஆடி வருகிறது. முதல் டெஸ்டில் தோல்வியடைந்த நிலையில் சிட்னி டெஸ்டில் இந்திய பந்துவீச்சு கடும் விமர்சனத்திற்கு ஆளானது. முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கும் சொதப்பியதால் இந்த ஆட்டத்திலும் இந்திய அணி தோல்வியை எதிர்நோக்கி உள்ளது.  இந்நிலையில் மாஜி கேப்டன் கபில்தேவ் கூறியது: முன்னணி வீரர்கள் யாருமே ரன்குவிக்காத போது டோனியால் என்ன செய்ய முடியும்? 

டோனி ஆக்ரோஷமாக செயல்பட வேண்டும். தனக்கு தேவையான சிறந்த வீரர்களை அவர் தேர்வு செய்ய வேண்டும். இளம்வீரர்களை மீண்டும் அணிக்கு கொண்டுவர வேண்டும். இதற்காக ஒரு சில கடினமான முடிவுகளை டோனி எடுக்க வேண்டும். சரியாக விளையாடாத வீரர்களை தூக்கி எறிய வேண்டும். அப்போதுதான் வெற்றி முகத்திற்கு திரும்ப முடியும் என்றார்.
இது குறித்து தேர்வுக்குழு மாஜி தலைவர் வெங்க்சர்க்கார் கூறியதாவது: 
 டோனி ஒன்றும் மந்திரவாதி இல்லை. நல்ல அணி இருந்தால்தான் கேப்டனால் சாதிக்க முடியும். முதல் நாளிலேயே ஆல்அவுட் ஆனபோதே பின்னோக்கி சென்று விட்டோம். ஒட்டுமொத்த வீரர்களும் ஒழுங்காக ஆடாதபட்சத்தில் கேப்டனால் என்ன தான் செய்ய முடியும். அடுத்த 2 வருடத்திற்குள் மீண்டும் வலுவான ஒரு அணியை டோனியின் தலைமையின்கீழ் உருவாக்க வேண்டும் என்றார்.