அதிரையில் நடக்கும் அனாச்சாரங்களில் அதிகம்,அதிகமாக விமர்சிக்கப்படுவது ஒவ்வொரு வருடமும் நடக்கும் கந்தூரி விழா எனும் மார்க்க விரோத நிகழ்ச்சிகளே, இஸ்லாத்தை அடுத்தவர்களுக்கு எத்திவைப்பது ஒவ்வொரு முஸ்லிமின் இன்றியமையாததாகும் அதைத்தான் தென்னிந்தியாவிற்கு சவூதி அரேபியாவிலிருந்து கேரள மலபார் கடற்கரை வழியாகவும்,வடஇந்தியாவிற்கு ஆப்கன் வழியாக முஹலாயர்கள் மூலமும் இஸ்லாத்தைக் கொண்டுவந்தனர் நமது பெரியார்கள். நிச்சயம் இவர்கள் மரியாதைக்குரியவர்களே,இஸ்லாத்தை எத்திவைக்கும் அவர்களது நோக்கமும் செயலும் அல்லாஹ்விடம் வெகுமதிக்கு உரியவை என்பதிலும் ஐயமில்லை.
இப்படி இருக்கும் நிலையில் கந்தூரி என்ற பெயரில் இரவில் ஆட்டம்,பாட்டம் போன்ற நிகழ்சிகளில் கலந்து கொள்வது நமது மார்க்கத்திற்கு மிகவும் புறம்பான செயல்.இது அதிரையில் பல வருடங்களாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
இதனால் இஸ்லாமிய இளைஞர்கள் சந்தோசமாக இரவு நேரத்தில் மது அருந்தி வீண் விவாதங்களில் ஈடுபடுகின்றனர்.இது முற்றிலும் நூற்றுக்கு நூறு தவறு.
இரவு நேரத்தில் கண் விழித்து கந்தூரியில் நடக்கும் அனாச்சாரங்களை பார்க்க நமது கண்ணியமான மார்க்கம் தடை செய்து இருக்கிறது.
இதில் மிகவும் வேதனையான விஷயம் என்னவென்றால் வீட்டில் உள்ள பெண்களும் இந்த கந்தூரிக்கு செல்கின்றனர்.அவர்களிடம் இது பற்றி நாம் விளக்கி கூறினால் பெண்களிடம் வரும் ஒரே வார்த்தை நாங்கள் கந்தூரியில் நடக்கும் காட்சிகளை காண செல்லவில்லை.வீட்டிற்கு தேவையான பொருள்களை பார்த்து வாங்க செல்கின்றோம்.இதை பெண்கள் ஒரு மந்திர சொல்லாகவே பயன்படுத்துகின்றனர்.
நபி(ஸல்) அவர்கள் நமக்கு சொல்லி தந்து இருக்கின்றார்கள்.
பெண்கள் அந்நிய ஆண்களை பார்ப்பது ஹராம் என்று.ஆனால் இன்று இதை எத்தனை பெண்கள் கடைப்பிடிகின்றார்கள்? சொல்லுங்கள் பார்ப்போம்..
இதனை வீட்டில் உள்ள ஆண்கள் தான் சரி செய்ய வேண்டும்.கந்தூரியில் எத்தனையோ அந்நிய ஆண்கள் இருக்கின்றனர்.சில இளைஞர்கள் குடித்து விட்டு பெண்களிடம் தகராறு செய்வது போன்ற மானக்கேடான செயல்கள் நடைபெறுகிறது.
இனி வரும் காலங்களில் இது போன்ற மானக்கேடான செயல்களில் ஈடுபடமால் அதிரை இஸ்லாமிய இளைஞர்களையும்,பெண்களையும் பாதுகாத்து கொள்வோம்.
Social Plugin