ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடியது.இந்த தொடரில் 4 -0 என தொடரை பரிதாபமாக பறிகொடுத்தது.இந்த தோல்வியின் காரணமாக இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கடுமையாக இந்திய அணி வீரர்களை விமர்சித்து வருகின்றனர்.இவர்கள் ஒரு பக்கம் விமர்சித்தாலும் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் வசைபாடி வருகின்றனர்.இதற்க்கு அணியின் கேப்டன் தோனியும் விதிவிலக்கு அல்ல.
இந்த நிலையில் இன்று நடந்த 20 ஓவர் கிரிக்கெட் தொடரிலும் இந்திய அணி மோசமான தோல்வியை தழுவி உள்ளது.
முதலில் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்தது.அணியின் தொடக்க வீரர்களாக களம் புகுந்த வார்னர்,வாடே ஆகியோர் ஆட்டத்தை அதிரடியாய் துவங்கினர்.
அதிகபட்சமாக வாடே 72 ரன்கள் குவித்தார்.டேவிட் ஹஸ்ஸி 42 ரன்கள் குவித்தார்.
ஆஸ்திரேலியா அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் சேர்த்தது.
172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்தியா ஆடியது.ஆரம்பமே அதிர்ச்சியை தந்தது.சேவாக் 4 ரன்களில் வெளியேறினார்.
20 ஓவரில் இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் மட்டுமே குவித்து தோல்வியை தழுவியது.
ஆஸ்திரேலியா 31 ரன்கள் வித்யாசத்தில் அபார வெற்றி கண்டது.
தற்பொழுது ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி ஒரு வெற்றி கூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Social Plugin