பிளஸ்-2 தேர்வு மார்ச் 8-ந்தேதி தொடங்குகிறது. இதையொட்டி தேர்வுத்துறை மாநிலம் முழுவதும் பறக்கும்படை அமைத்து தேர்வு எழுதும் இடங்களில் முறைகேடு நடைபெறாத அளவுக்கு கண்காணிப்பை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.
சில முக்கிய மையங்களில் நிரந்தர பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளது.
வகுப்பறைக்குள் புத்தகத்தை அனுமதித்து மாணவர்களை தேர்வு எழுத சொல்வதாக சில பள்ளிகள் மீது புகார் வந்துள்ளதால் அந்த பள்ளிகளிலும் கண்காணிப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தேர்வுதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுதவிர தேர்வு அறைக்குள் மாணவர்கள் பெல்ட் அணிந்து செல்லக்கூடாது, செல்போன், துண்டு பிரசுரம் எடுத்து செல்லக்கூடாது. ஷு, புத்தகம் ஆகியவற்றை வெளியே வைத்துவிட்டு வரவேண்டும் என்றும் கட்டுப் பாடு விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Social Plugin