அந்தக் காலத்தில் இந்திய அரசியல் வானில் முஸ்லிம் லீக் கட்சி ஜொலித்தது.இது கால ஓட்டத்தில் காணாமல் கரைந்து போய்விட்டது. சிலர் அந்த பேரியக்கத்தை இன்று சின்னக் கடைகளாக நடத்தி வருகிறார்கள் என்பது வருத்தமானதுதான்.
பின்னாளில் RSS.க்கு எதிர்வினை அரசியல் பண்ண தமிழக முஸ்லிம்கள் மத்தியில் பழனி பாபா அரசியல் நடத்தினார் அது பின்னாளில் ஒரு ஜாதிகட்சியாகவே மாறி விட்டது .
அவரின் மறைவுக்குப் பின் கடை விரித்த தமுமுக எனும் அமைப்பு நாங்கள் அரசியல் கட்சியாக ஒருபோதும் மாறமாட்டோம் என கூறி தமிழகம் மட்டுமின்றி உலகெங்கும் காலூண்டியபின் இன்று அரசியல் கட்சியை உருவாக்கி படிப்படியாக உண்மையிலேயே பெரு வளர்ச்சி கண்டு இரண்டு சட்ட மன்ற உறுப்பினர்களை கொண்ட கட்சியாக உள்ளது மமக .
இதே போன்று பாப்புலர் ஃப்ரென்ட் ஆஃப் இந்தியா எனும் அமைப்பு நான்கு ஆண்டு கால ஆராய்ச்சிக்கு பின் SDPI எனும் தேசிய கட்சியை ஆரம்பித்தது .மேற்கண்ட கட்சிகள் பல்வேறு தேர்தல்களை சந்தித்து உள்ளனர்.

சந்தோசம்தான் !!
ஆனால் இந்த அமைப்புகள் என்று கட்சிகளாக மாறியதோ அன்று முதல் தான் சமுதாயத்தில் பல்வேறு பிரச்சனைகளும் சண்டைகளும் சச்சரவுகளும் உண்டானது என்றால் மிகையில்லை.
மாற்று அரசியலுக்கு அடித்தளமிடும் மேற்காணும் கட்சிகள் ஒருவருக்கொருவர் ஆயுதம் கொண்டு தாக்கி கொள்வது எந்த வகையில் நியாயம்?
ஒற்றுமையை போதிக்கும் மார்க்காமான இஸ்லாத்தின் பெயரால் ஆரம்பிக்கப்பட்ட இந்த இயக்கங்களின் கட்சிகள் ஒற்றுமையின்மையால் சின்னாபினாமாகி வருவதை மாற்றார்கள் கைகொட்டி சிரிக்கிறார்கள் காவல் காக்கவேண்டிய காவல்துறையோ இரு அமைப்புகளை சார்ந்தவர்களிடையே சிண்டு முடிந்து விடுகிறார்கள் .
ஒற்றுமைக்கு உலை வைக்கும் சமுதாய கட்சிகள் என்று ஒற்றுமையை கடைப்பிடித்து ஒரே குடையின் கீழ் வருகிறதோ அன்று தான் ஆட்சி அதிகாரத்தை நம்மால் பெற முடியும் என்பது மட்டும் திண்ணம் இதற்க்கான தீர்வு ஒற்றுமையே....
எது எப்படியோ தமிழ்நாட்டில் முப்பதுக்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள், கடைகளாக நடத்தப்பட்டு வருவது உண்மை. இவர்கள் எல்லோருமே, முஸ்லிம் இளைஞர்களை கவருவதும், கூட்டங்கள் மாநாடுகள் நடத்துவதும், அரசியல் அதிகாரத்தை நோக்கி பயணிப்போம்! என்று குரல் எழுப்புவதும் தமது கட்சியின் டெக்னிக்காக வைத்துள்ளார்கள்.
Social Plugin