Hot Posts

6/recent/ticker-posts

மாணவர்களை பாதிக்கும் 8 மணி நேர மின் தடை!!!


தமிழகத்தில் மின் பற்றாக்குறை காரணமாக தினமும் மின் தடை செய்யப்படுகிறது.மின் பற்றாக்குறை என்றால் கூடன்குளத்தில் உள்ள அணு மின் நிலையத்தை திறந்து செயல்படுத்த வேண்டும்.இல்லை என்றால் தமிழகம் இனி  காலம் முழுவதும் இருட்டிலே வாட வேண்டியது தான்.

அரசுப் பொதுத் தேர்வுக்கு இன்னும்  ஒரு மாதங்களே உள்ள நிலையில் இது போன்ற மின் தடை செய்தால் மாணவர்களின் கதி? கல்வியாளர்களே,அருமைப் பெற்றோர்களே,சிந்திக்க தெரிந்த நல்ல சிந்தனையாளர்களே ஒரு 2 நிமிடம் அரசுப் பொதுத் தேர்வை எழுதவுள்ள மாணவனாய் இருந்து சிந்தியுங்கள்!! 
அப்பொழுது அந்த மாணவர்களின் வேதனை உங்களுக்கும் தெரியும்.

இன்று நமதூர் அதிரையை மட்டுமல்ல தமிழகத்தையே எடுத்துக் கொண்டால் எப்பொழுது மின் தடை ஏற்படும் என்றே சொல்ல முடியவில்லை.
நமதூர் அதிரையில் இரவு நேரத்தில் தான் அதிகமாக மின் தடை ஏற்படுகிறது.இரவு 7 மணி பின்பு 8 மணி அதன் பின்பு 10 இதற்குப் பிறகும் நள்ளிரவு 12 மணி முதல் 1.30 மணி வரை மின் தடை செய்யப் படுகிறது.

இதனால் மாணவர்கள் மட்டுமின்றி வயதானவர்களும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.தமிழகத்தில் என்ன நடக்கிறது என்று ஒன்றுமே அறியாத பிஞ்சுக் குழந்தைகளும் நிம்மதியாக உறங்க முடிவதில்லை.

இந்த மின் தடையினால் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகும்  நிலைமையும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிரை எக்ஸ்பிரஸ்,அதிரை பிபிசி போன்ற முன்னணி வலைத்தளங்களும் மாணவர்களின் நலன் கருதி மின் தடையின் செய்திகளை வெளியிட வேண்டும்.
அப்பொழுதாவது மின்சார வாரியம் செவி சாய்க்குமா என்று பார்ப்போம்!