நமதூரில் தபால் நிலையம் E.C.R ரோட்டில் கல்லூரி அருகே இயங்கி வந்தது.
தற்பொழுது பழஞ்செட்டி தெருவில் இயங்கி வருகிறது.
முன்பெல்லாம் தபாலில் தான் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு கருத்துகளையும் செய்திகளையும் பகிர்ந்துக் கொள்ள முடியும். ஆனால் இப்பொழுதோ காலம் மாறி விட்டது.(E -MAIL) என்று சொல்லப் படும் மின் அஞ்சலில் தான் செய்திகளையும்,கருத்துகளையும் அனுப்பப் பட்டு வருகிறது.
நமதூர் அதிரையில் பெரும்பாலானோர் வீடுகளில் கணினி இருக்கிறது.அதனை பயன்படுத்திகொண்டு செய்திகளையும்,கருத்துகளையும் கணினி இருப்பவர்கள் அனுப்பிக் கொள்ளலாம்.ஆனால் இல்லாதவர்கள் தபாலில் தான் அனுப்ப முடியும்.இதே போன்று (E -MAIL) பயன்படுத்த தெரியாதவர்களும் தபாலில் தான் தங்களது செய்திகளை அனுப்ப முடியும்.
இதற்காக பழஞ்செட்டி தெருவிற்கு சென்று தான் தபால் அனுப்ப வேண்டும் என்று இல்லை.நமதூர் புதுமனைத் தெரு செக்கடிப் பள்ளி பழைய (ஆட்டோ ஸ்டாண்ட்)அருகில் உள்ள தபால் பெட்டியிலும் தபால்களை போடலாம்.
இங்கு ஒவ்வொரு நாளும் தபால் ஏதேனும் இருக்கிறதா என்று தபால் நிலைய ஊழியர்கள் சோதனை செய்து விட்டு செல்கின்றனர்.
பெரியவர்கள்,ஏதேனும் வெளியூர்களுக்கு தபால் போட வேண்டுமென்றால் புதுமனைத் தெருவில் உள்ள தபால் பெட்டியில் போடுங்கள்.உங்கள் வேலைகளும் குறைந்து அலைச்சலும் இல்லாமல் இருக்குமல்லவா!
இதனைப் படித்தவர்கள் தங்களுக்கு தெரிந்தவர்களிடமும் சொல்லலாமே!
Social Plugin