Hot Posts

6/recent/ticker-posts

அதிரை வலைப்பூங்கா ஓர் அறிமுகம் !


தற்பொழுது அதிரையின் யூனிவர்சிட்டி என்று செல்லமாக அழைக்கப்படும் நமது  அதிரை எக்ஸ்பிரஸ் ஆரம்பித்த நோக்கமே அதிரையில் உள்ள பொது பிரச்சனைகளை ஆட்சியாளர்களுக்கும் அதிகார வர்க்கத்தினருக்கும் நமது கோரிக்கைகளை கொண்டு செல்ல வேண்டும் என்பதும், இளம் எழுத்தாளர்களை உருவாக்க வேண்டும்  என சீரிய சிந்தையின் வெளிபாடேஆகும் அதன் விளைவு  இன்று அதிரையில் மட்டும் ஐம்பதுக்கும் மேற்பட்ட வலைப்பூக்கள் !

இவற்றை எல்லாம் ஒருமித்து அதிரையின் பிரதான தளங்களில் ஒன்றான அதிரை.இன்னில் சங்கமிக்க வைக்கவேண்டும் என நீண்ட நாட்களாக அதிரைகுரலின் சார்பில் வலியுறுத்தி வந்தோம் இதேபோல் மற்ற சிறு எழுத்தாளர்களும் இதே கோரிக்கையை மேற்காணும் இணையத்தின் நிர்வாகத்தினருக்கு மின்மடல் வழி தொடர்ந்து கேட்டுகொண்டதன் வெளிபாடே அதிரை.இன்னின் புதிய சேவையான அதிரை வலைப்பூங்கா என அதன் நிர்வாகிகளில் ஒருவர் நம்மிடம் கூறினார் .

அப்புறம்என்ன ? அதிரையின் அனைத்து இளம் எழுத்தாளர்களின் வலைப்பூக்களும் இனி ஒரே குடையின் கீழ் வருவதால் அதிரையின் அனைத்து வலைப்பூக்களுக்கும் நேயர்களின் எண்ணிக்கை கூட ஏராளமான வாய்ப்புகள் உருவாகியுள்ளன 

எனவே அதிரையின் அனைத்து வலைப்பூ நடத்துனர்களும் தரமிக்க எழுத்துகளை தந்து ஊரறிந்த உங்களை உலகறிய செய்ய வேண்டும் என அதிரை குரலின் சார்பில் கேட்டுகொள்கிறோம்.
அதிரை வலைப்பூங்காவிற்கு செல்லும் வழி   இதோ...