Hot Posts

6/recent/ticker-posts

மாணவர்களே! சந்தித்தோம் ! சந்திப்போம்!


பள்ளி செல்லும் அனைத்து மாணவர்களுமே தேர்ச்சி பெறுவதில்லை சிலர் தேர்ச்சி பெறுகின்றனர் சிலர் தோல்வி அடைகின்றனர் தேர்ச்சி பெறுபவர் மெல்நிலைப் வகுப்புகளுக்கும் சிலர் கல்லூரிகளுக்கும்  செல்கின்றனர் தோல்வி அடைபவர்கள் தங்கள் எதிர் காலத்தை குறித்த வகையில் நஷ்டமடைகின்றனர் இது போன்று நம் வாழ்ககையில் ஈமானுடன் வாழ்ககை அமைத்தால் நாம் இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெறலாம் என்ற நோக்கில் அதனை ஒப்பிட்டு பார்க்கலாம்

 தேர்வுகள்:
உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். (67:2)
பள்ளியின் முதல் துவங்கும் பொழுதே தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல அறிவுரைகள் கூறும் போது கவனமாக மனதில் கொண்டு நடந்தால் நாம் அதிக மதிப்பெண் எடுக்கலாம் நமது படிப்பின் தரத்தை அதிகப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் அதைவிட்டு நம் மன இச்சைப்படி வாழ்வைத் துவங்கினால் வெற்றியை எட்டிப்பிடிப்பது கடினம்!

ஆசிரியர்கள் கூறும் அறிவுரைகளை எந்த அளவு கேட்டு நடந்தோம் அல்லாஹ் நபி(ஸல்) அவர்கள் கூறிய அறிவுரைகளை எந்த அளவிற்கு நம் வாழ்வில் கடைபிடிக்கிறோம் மாணவர்களே! சிந்தியுங்கள். நமது படிப்பை அதிகப்படுத்த இறுதித் தேர்விற்கு நம்மை தயார்படுத்த நாம் வாழ்வில் ஒரு வருடத்தில் பல தேர்வுகளைனளைச் தேர்வுகளைச் நச்தித்தோம் அது போல் நாம் சுவர்கத்தைச் சந்திக்க அல்லாஹ் உலகில் நன்மையான காரியம் எது? தீமையான காரியம் எது? என்பதைக் குறித்து அதன் மூலம் ஏழை பணக்காரன் என்று சோதனை செய்யவோ மனிதனை படைத்தான் தேர்வில் அடைந்தால் அந்த மதிப்பெண் கீழே சீவப்புமையில் கோடு இடப்படுகிறது அது நம் மனதில் பதிந்து அடுத்த தேர்வில் கோடு வரக்கூடாது என்று அதிகம் முயற்சி எடுக்கிறோம் அது போல் அல்லாஹ் வகுத்துள்ள தீய செயல்களைக் கண்டு அதனை செய்யாது இருக்க ஏதேனும் முயற்சி செய்கிறோமா எனச் சிந்தியுங்கள் மாணவர்களே!

அல்லாஹ் தான் விதித்த கடமைகளை நிறைவேற்றாத காரணத்தால் சில சோதனைகளை கொண்டு சோதிக்கிறான் அதைப்பார்த்து தன் வாழ்க்கையை மாற்றியவர்கள் எத்தனை நபர்கள் பூகம்பம்,சுனாமி இது போன்று எத்தனையோ நிகழ்வுகளை ஏற்படுத்துகிறான்.ஆசிரியர் கொடுக்கும் பாடங்களை படித்து முடிக்காத காரணத்தால் தண்டனை கிடைக்கும் என பயந்து கவணத்துடன் படித்து தேர்விலும் வெற்றி பெறுகிறோம். சொற்ப உலக படிப்பிற்கே இவ்வளவு நேரத்தை செலவு செய்யும் நாம் முடிவில்லா மறுமை வாழ்விற்கு எவ்வளவு நேரத்தை ஒதுக்க வேண்டும்

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் உங்கள் குழந்தைகளுக்கு 7 வயது அடைந்துவிட்டால் தொழும்படி ஏவுங்கள் 10 வயது அடைந்தும் அக் குழந்தை தொழாவிட்டால் அடித்தாவது தொழுகையை கற்றுக் கொடுங்கள் (அபூ தாவூத்)

நாம் பாடங்களைப்படிக்க 5பாட வேலைகளைப் பயண்படுத்துகிறோம் 5ல் 1பாட வேளையை தவறவிட்டாலும் அப்பாடங்களை தெரியாத நஷ்டவாளிகளாக ஆகிவிவோம் அது போல் ஒரு நேரத் தொழுகையை தவறிவிட்டால் நாம் பெறும் நஷ்டம்

ஒருவருக்கு ஒரு நேரத் தொழுகை தவறிவிட்டால் அது அவருடைய குடும்பமும் சொத்துகளும் பறிக்கப்பட்டதற்குச் சமமாகும் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் (தர்கீப்) எனவே நாம் எத்தனை தொழுகையைப் தவறவிட்டோம் மாணவர்களே சிந்தியுங்கள்!!
                       
 வினா அமைப்பு:
மாணவர்களுக்கு ஒவ்வொரு பாடத்திற்கும் மதிப்பெண் ஒதுகீட்டை வைத்து ஆசிரியர்கள் பாடம் நடத்துகின்றனர் பயிற்சி அளிக்கின்றனர் ஆனால் அதனைப் பயண்படுத்தாத மாணவர்கள் தனக்கே எல்லாம் தெரியும் தன்னால் எல்லா முடியும் என்று நினைத்து செயல்பட்டு தேர்வில் தொல்வியைத் தழுவுகின்றனர் அதுபோல் சுவர்கத்தை சுவைக்க மகிழ்ச்சி தரும் மறுமையை அனுபவிக்க அல்லாஹ் கூறியதும் நபி(ஸல்)அவர்கள் கூறியதை செயல்படுத்தினால் சுவர்க்கம் செல்லாம் இது பாவச்செயல் இது நரகத்திற்குச் செல்லும் வழி இது சுவர்கத்திற்க்கு செல்லும் வழி இது மறுமைக்கு வழி எனப் பல வழிகளும் மக்களை நெறிப்படுத்த பல நன்னெறிகளை வகுத்து மக்களை ஈமானுடையவர்களாக மாற்ற வழி கூறினார்கள் கப்ரில் கேள்வி கேட்க்கப்படும் வினா:
1.உன்னுடைய ரப்பு யார்
2.உன்னுடைய நபி யார்
3.உன்னுடைய மார்க்கம் எது?
4. உன்னுடைய வேதம் எது
5.உன்னுடைய கிப்லா எது?
     இந்த கேள்விகளுகு யார் செயல் முறையில் நடந்தர்களோ அவர்கள் மட்டுமே பதில் கூற முடியும் அற்கு யாருரடைய சிபாரிசும் ஏற்றுக்கொள்ள மாட்டாது மாணவர்களே மறுமையை மகிழ்ச்சியாக்கிக் கொள்ளத் தேவையான மதிப்பெண் ஒதுக்கீட்டிற்கான வினாக்களைக் கண்டீர்கள் சிந்தியுங்கள் செயல்படுத்துங்கள்!


நாம் மறுமையைப் பெற கீழ்கானும் 5 வருவதற்கு முன் முந்திக்கொன்மு அமல் செய்யுங்கள்


1.வயோதிகம் வருமுன் வாலிபம்  2.நோய் வருமுன் சுகம் 3.வேலை வருமுன் ஓய்வு
4.கஷ்டம் வருமுன் தர்மம் 5.மரணம் வருமுன் வாழ்க்கையை சரி செய்தல்
கியாமத் நாளிற்கான வினாகளுக்கு மதிப்பெண் ஒதுக்கீடு:
1.வயதை எந்த வழியில் செலவு செய்தாய்
2.வாலிபத்தில் எந்த வழியில் செலவு செய்தாய்
3.தன்னுடைய இல்மு கற்ற படி என்ன அமல் செய்தாய்?         
4.பொருளை எப்பn சம்பதித்தாய்
5.பொருளை எப்படி செலவு செய்தாய்?


அல்லாஹ் அன்றி வேறு நிழல் இல்லாத நாளில் கீழ்காணும் ஏழு வகையான மனிதர்களுக்கு அல்லாஹ் தனது ரஹ்மத் என்னும் அருட்கொடை அளிப்பான்.
1.நீதமான அரசன் 
2.அல்லாஹ்வின் வணக்கத்தில் ஈடுபட்டவர் 
3.மஸ்ஜித்துடன் தனது உள்ளம் கழித்த மனிதர் 
4. அல்லாஹ்க்காக நேசிக்கும் இரு மனிதர்கள் அல்லாஹ்விற்காக ஒன்று சேர்தல் அல்லாஹ்விற்காக பிரிதல் 
5.ஒரு பெண் தவறான வழிக்கு அழைத்தும் அல்லாஹ்வை அஞ்சி விலகிக்  கொள்பவர் 
6.தான் செய்த பாவத்தை நினைத்து கண்ணீர் சிந்துபவர் 
7.தனது வலக்கை கொடுத்து இட துகைக்கு தெரியாமல் தர்மம் செய்தவர். இவ்வினாகளு;கு மாணவர்களே தயார் செய்துவிட்டால் சுவுர்கத்தை சுவையுங்கள்.
  
 ஹால் டிக்கட்:
10.12.ம் வகுப்பு ஆண்டு தேர்வு எழுத நுழைவுச் சீட்டு வழங்குபவர் வகுப்பின் சரியான முறைப்படி நடந்து நண்கு படித்து ஆசிரியர்களை மதித்து பள்ளியின் விதிமுறைகளுக்குக் கட்டுபட்டு அனைத்துப்பாடங்களையும் ஆசிரியர் கற்பித்த படி பயின்று தேர்வுக்கு தயாராக உள்ள மாணவர்களுக்கு அனைத்து ஆசிரியர்களின் முன்பு கவுரவித்து அந்த நுழைவுச் சீட்டு கொடுக்கப்படும்.

ஆனால் அதற்க்கு மாறாக தன் மனோஇச்சைப்படி வாழ்ந்து தேர்விற்கும் தன்னைத் தயார் செய்து கொள்ளாமல் ஆசிரியர்களுடைய அறிவுரைகளை மதிக்காது இருந்த மாணவகளுக்கு ஆசிரியர்கள் மிகுந்த மனவேதனையோடு மரியாதை இல்லாமல் கொடுக்கப்படும்.


இது போன்று தான் நம் ஒவ்வொருவருக்கும் ஸகராத் இருக்கிறது.அல்லாஹ் நபி(ஸல்)அவர்கள் கூறியபடி நம் வாழ்வு இருந்தால் நாம் கவுரமாக ஹால்டிக்கட் பெற்ற மாணவனைப் போன்று ஸகராத்தை அனுபவிப்போம்

ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிப்பதாவது நபி(ஸல்)அவர்களின் வபாத் நெருங்கிய போது அவர்களின் அருகில் நீரால் நிரப்பப்பட்ட பாத்திரம் வைக்கப்பட்டியிருந்தது நபி(ஸல்)அவர்கள் அடிக்கடி தமது முபாராக்கான கையை நீர்ப்பாத்திரத்தில் போட்டு பிறகு தமது முகத்தில் தடவிக்கொண்டவர்களாக யா அல்லாஹ்! ஸக்ராத்தின் வேதனையின் எனக்கு உதவி செய்வாயாகஎன்று இறைஞ்சிக் கொண்டியிருந்தார்கள்.
நல்லவர்கிள் உயிர் எப்படி பிரியும்

16:30 பயபக்தியுள்ளவர்களிடம், ''உங்களுடைய இறைவன் எதை இறக்கி வைத்தான்?'' என்று (குர்ஆனை குறிப்பிட்டு) அவர்களிடம் கேட்கப்பட்டபோது ''நன்மையையே (அருளினான்)'' என்று அவர்கள் (பதில்) கூறுவார்கள். எவர் அழகான நன்மை புரிந்தார்களோ, அவர்களுக்கு இவ்வுலகிலும் அழகான நன்மையுண்டு; இன்னும், மறுமை வீடானது (அவர்களுக்கு மிக) மேலானதாகவும் இருக்கும், பயபக்தியுடையவர்களுடைய வீடு நிச்சயமாக நேர்த்தியானது!

16:3என்றென்றும் நிலைத்திருக்கக் கூடிய சவனபதிகளில் அவர்கள் நுழைவார்கள்; அவற்றின் கீழே ஆறகள் ஓடிக்கொண்டிருக்கும்; அவர்களுக்கு அங்கே அவர்கள் விரும்புவதெல்லாம் கிடைக்கும். இவ்வாறே பயபக்தியுடையோருக்கு அல்லாஹ் நற்கூலியளிக்கிறான்.

16:32 குஃப்ரை விட்டும்) தூயவர்களாக இருக்கும் நிலையில் மலக்குகள் எவருடைய உயிர்களைக் கைப்பற்றுகிறார்களோ அவர்களிடம்; ''ஸலாமுன் அலைக்கும்' (''உங்கள் மீது சாந்தி உண்டாவதாக); நீங்கள் செய்து கொண்டிருந்த (நற்) கருமங்களுக்காக சவனபதியில் நுழையுங்கள்'' என்று அம்மலக்குகள் சொல்வார்கள்.
கெட்ட மனிதர்களின் உயிர் எப்படி பிரியும் என்று அல்லாஹ் கூறிப்பிடுகிறான்

16:28 அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்பவர்களாக இருக்கும் நிலையில், மலக்குகள் அவர்களுடைய உயிர்களைக் கைப்பற்றுவார்கள்; அப்போது அவர்கள், ''நாங்கள் எந்தவிதமான தீமையும் செய்யவில்லையே!'' என்று (கீழ்படிந்தவர்களாக மலக்குகளிடம்) சமாதானம் கோருவார்கள்; ''அவ்வாறில்லை! நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை நன்கறிந்தவன்; (என்று மலக்குகள் பதிலளிப்பார்கள்.)
16:29.''ஆகவே, நீங்கள் நரகத்தின் வாயில்களில் புகுந்து, அங்கே என்றென்றும் தங்கியிருங்கள்'' (என்றும் மலக்குகள் கூறுவார்கள்; ஆணவங் கொண்டு) பெருமையடித்துக் கொண்டிருந்த இவர்களின் தங்குமிடம் மிகவும் கெட்டது.
ஆகவே நம்முடைய நோக்கம் மறுமையாகவே இருக்க வேண்டும் ஸகராத் நல்ல முறையில் இருக்க வேண்டும் ஸகராத் நல்ல முறையில் அமைய நம் செயல்பாடுகள் ஈமானுடன் நன் முறையில் அமைய வேண்டும்.

ஸகராத் நன் முறையில் அமைய அல்லாஹ் நபி(ஸல்)அவர்களின் முன் உதாரணம் இருக்கிறது.ஒரு மனிதன் பாவமன்னிப்பு ஸகாரத்திற்கு முன்பே மன்னிக்கப்படும் ஸகராத் வந்த பின் மன்னிக்கப்படமாட்டாது எனவே நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் மரணத்தை அதிகம் ஞாபகம் செய்யுங்கள் ஒரு நாளைக்கு 25 முறை அல்லாஹூம்ம பாரிக்லி பில் மௌத் வபிமா பஃதல் மௌத்

 தேர்வு அறை:
மாணவர்கள் அனைவரும் ஆண்டு இறுதியில் தேர்வை சந்திக்கவேண்டும். ஆசிரியர் அறிவுரையோடு நன் முறையில் படித்தவர்கள் மகிழ்வுடன் தேர்வை சந்திப்பார்கள். தேர்வின் போது அமரும் இடம் வேறுநம்முடன்  அமர்ந்து படித்த நண்பர்களோ வேறு இடம், பாடம் நடத்திய ஆசிரியர்களோ. தலைமைஆசிரியர்ரோ யாரும் அங்கு வர இயலாது யாருடைய உதவியும் கேட்க முடியாது கண்கானிக்கும் ஆசிரியர் வேறு இடத்தைச் சார்ந்தவர் நமக்கு அருகில் அமரும் மாணவரோ புதியவர் அனுமதித்த பொருட்களை மட்டுமே கொண்டுச்செல்ல முடியும் தேர்வு அறையில் கொடுக்கப்படும் வினாத்தாளுக்கு அங்கு கொடுக்கப்படும் விடைத்தாளிலேயே பதில் எழுதவேண்டும். அதுவும் அவர்கள் அனுமதித்த நேரத்திலேயே பதில் முடித்து தரவேண்டும் சில நிமிடம் அதிகறிக்கவும்  முடியாது குறைக்கவும் முடியாது.அனைவருக்கும் ஒரே மாதிரியான வினாத்தாள் கொடுக்கப்படும். இம்மாதிரியான நிலையில் அவர்களுக்கு உதவக்கூடியது ஒன்றுதான் நல்ல முறையில் அவர்கள் படித்தது மட்டுமே.

நாம் இப்படியும் ஒரு நாளை மறுமையில் சந்திப்போம் அங்கு யாருடைய உதவியும் கிடைக்காது. அது தான் கப்ர்  ஒரு வருட பள்ளி வாழ்க்கையிலேயே இவ்வளவு கஷ்டம் என்றால் மறுமை வாழ்வின் நிலைமை ஒவ்வொரு மனிதனும் சிந்திக்க வேண்டியவை நாம் என்ன உதவி செய்தோம்!யாருடைய உதவியும் அடைய முடியாது

இது வரைக்கும் யாரும் அங்கு சென்று உதவி செய்ததில்லை.அங்கு அவன் செய்த அமல்கள் மட்டுமே உதவி புரியும். குடும்பத்தில் நம்மக்கள் வரிசையாக பிறந்திருந்தாலும் இறக்கும் சமயம் யார் முன்பு யார் பின்பு என்று தெரியாது. அனைவருக்கும் ஒரே உடை தான் கேட்கப்படும். கேள்விகளுக்கு ஈமானுடையவர்கள் நல்ல பதில்களையும் தம் இச்சைப்படி வாழ்வை கழித்தவர்கள் எனக்கு ஒன்றுமே தெரியாது என்று கூறுவார்கள் மாணவர்களே சிந்தியுங்கள்!

 தேர்வு முடிவு:
மாணவர்களின் தேர்வு முடிவு வெளியாகும் நாள் எப்படி இருக்கும்? அன்றைய நாள் வாழ்வில் மறக்க முடியாது நாள் என்று கூறுவர். தேர்வு எழுதிய நாள் முதல் எப்பொழுது தேர்வு முடிவு என்ற சிந்தனையில் இருப்பர் தூக்கம் வராது!, விளையாட்டில் கவணம் செல்லாது! நண்பர்களை சந்தித்தாலும் இதே பேச்சு! தேர்வு முடிவு 10 மணிக்கு என்றால் 9 மணிக்கே எப்பொழுது 10 மணி வரும் என்ற கவனம் ஏற்படும்

தேர்வு முடிவு தெரிந்த பின் வெற்றியாக இருந்தால் அன்றைய தினம் ஏற்படும் மகிழ்ச்சியை விட மிகப்பெரிய மகிழ்ச்சி எதுவும் இருக்காது அதுவும் முதல் மதிப்பெண் என்றால் தனிமரியாதை பெற்றோர்களுக்கும் மரியாதை கிடைக்கும். அதற்கு மாறாக தோல்வி என்றால் நண்பனும் பிரிவான்  ஆசிரியர்கள் முன்பு கேவலம் பெற்றோர்களின் வருத்தம். பணம் நஷ்டம் எவ்வளவு பணம் இருந்தாலும் உதவி செய்ய முடியாது.

 எந்த ஒரு நண்பனும் 1 மதிப்பெண் தர  இயலாது  எத்தனை மதிப்பெண் என்று தேர்வு முடிவு வந்த பிறகு தான் தெரியும்  இது எல்லாம் அழிந்து செல்லும் சொற்ப காலத்திற்கே ஆனால் அழியாத, முடிவே இல்லாத வாழ்வு மறுமை வாழ்வு!


14:49.இன்னும் அந்நாளில் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டவர்களாகக் குற்றவாளிகளை நீர் காண்பீர்.

14:50அவர்களுடைய ஆடைகள் தாரால் (கீல் எண்ணையினால்) ஆகி இருக்கும்; இன்னும் அவர்களுடைய முகங்களை நெருப்பு மூடி இருக்கும்.

14:51.அல்லாஹ் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்ததற்கான கூலி கொடுப்பதற்காகவே (அவர்களை அல்லாஹ் இவ்வாறு செய்வான்.) நிச்சயமாக அல்லாஹ் கேள்வி கணக்குக் கேட்பதில் மிகவும் தீவிரமானவன்.

14:52.இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப் படுவதற்காகவும் (வணக்கத்திற்குரிய) அவன் ஒரே நாயன் தான் என்று அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும் அறிவுடையோர் நல்லணர்வு பெறுவதற்காகவும் மனிதர்களுக்கு இது ஓர் அறிவிப்பாகும்.

36:59.அன்றியும்; ''குற்றவாளிகளே! இன்று நீங்கள் (நல்லோரிலிருந்து) பிரிந்து நில்லுங்கள்'' (என்று குற்றவாளிகளிடம் கூறப்படும்).

22:1.மனிதர்களே! நீங்கள் உங்களுடைய இறைவனை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக (கியாமத்து நாளாகிய) அவ்வேளையின் அதிர்ச்சி, மகத்தான் பெரும் நிகழ்ச்சியாகும்.

22:2.அந்நாளில், பாலூட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தாயும் தான் ஊட்டும் குழந்தையை மறந்து விடுவதையும், ஒவ்வொரு கர்ப்பிணியும் தன் சுமையை ஈன்று விடுவதையும் நீங்கள் காண்பீர்கள்; மேலும், மனிதர்களை மதி மயங்கியவர்களாக இருக்க காண்பீர்; எனினும் (அது மதுவினால் ஏற்பட்ட) மதி மயக்கமல்ல ஆனால் அல்லாஹ்வின் வேதனை மிகக் கடுமையானதாகும

24:24.அந்நாளில் அவர்களுடைய நாவுகளும், அவர்களுடைய கைகளும், அவர்களுடைய கால்களும் அவர்களுக்கெதிராக, அவர்கள் செய்ததை பற்றி சாட்சியம் கூறும்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் சூரியன் மறுமை நாளில் ஒருமைல் அளவுக்கு இருக்குமளவு படைபிணங்களுக்கு அருகாமையில் கொண்டு வரப்படும் அப்போது மக்கள் தமது செயல்களுக்கு ஏற்ப வியர்வையில் முழ்கியிருப்பர் சிலரது வியர்வை அவரது கிரண்டைக் காலளவுக்கு வரும் இன்னும் சிலரது வியர்வை அவர்களது முழங்காலளவுக்கு வரும் வேறு சிலரது வியர்வையோ வாயளவுக்கு வந்திருக்கும் இங்கு நபி(ஸல்)அவர்கள் தனது கையினால் வாயைச் சுட்டிக் காட்டினார்கள்
(முஸ்லீம்)

அல்லாஹ் ஒரு மனிதனை நரவாதி என்று முடிவு செய்து விட்டால் அவனுக்கு பெற்றோர்களின் சிபாரிசு ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது முடிவைப் பார்த்த உடன் மிகவும் வருந்துவர் யாரும் ஆறுதல் கூற முடியாது படித்த பாடமோ பணமோ பதவியோ எந்தப் பயனும் தராது. எப்படி தேர்வு முடிவு வந்த பின் 1 மதிப்பெண் எவரிடம் பெறமுடியாதோ அந்த சூழ்நிலை அங்கும் ஏற்படும் அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக ஆமீன்

 தேர்வுப் பதிவேடு:
தேர்வு முடிவு வெளியான பின் மாணவர் அனைவரும் தேர்வு பதிவேடு வாங்க வருவர்  வெற்றி பெற்றவரோ மகிழ்வோடு வாங்கி அனைவரியிடம் காண்பித்து ஆனந்தப்படுவர் அதிக மதிப்பெண் எனில் கல்லூhயிpல் இலவச படிப்பு  உயர்ந்த பாடப்பிரிவு இல்லை எனில் குறைந்த கட்டணம் ஆனால் தோல்வி பெற்றவரோ எந்தப்பாடம்  என்று அறிந்து கண்ணீர் வடுவர்.பிறரியிடம் காண்பிக்க மறுப்பார் வெட்க்கப்படுவார் நானே வீனே என் நேரத்தை கழித்து என்னை இப்படி ஆக்கி கொண்டேனே என மனம் வருந்வர் எதில் தோல்வியோ அதில் மறுத்தேர்வு எழுத முயற்சி செய்வர்
அல்லாஹ் குர்ஆனில் இப்படி கூறுகிறான் மாணவர்களே சிந்தியுங்கள்!

17:13.ஒவ்வொரு மனிதனுடைய செயல் குறிப்பையும் அவனுடைய கழுத்தில் நாம் மாட்டி இருக்கிறோம்; கியாமத் நாளில் அவனுக்காக ஓர் ஏட்டை வெளிப்படுத்துவோம் - திறக்கப்பட்ட நிலையில் அதனை அவன் பெற்றுக் கொள்வான்.

17:14.''நீ உம் புத்தகத்தைப் படித்துப் பார்! இன்று உனக்கு எதிராக உன்னுடைய ஆத்மாவே கணக்கதிகாரியாக இருக்கப் போதும்'' (என்று அப்போது நாம் கூறுவொம்).

17:15.எவன் நேர்வழியில் செல்கிறானோ, அவன் தன்னுடைய நன்மைக்காகவே நேர் வழியில் செல்கிறான்; எவன் வழி கேட்டில் செல்கிறானோ, அவன் தனக்கே கேடு செய்து கொண்டான்; (நிச்சயமாக) ஒருவனுடைய பாவச்சமையை மற்றொருவன் சமக்கமாட்டான்; (நம்) தூதரை அனுப்பாத வரையில் (எவரையும்) நாம் வேதனை செய்வதில்லை.

84:7.ஆகவே எவனுடைய பட்டோலை அவனுடைய வலக்கையில் கொடுக்கப்படுகின்றதோ,

84:8அவன் சுலபமான விசாரணையாக விசாரிக்கப்படுவான்.

84:9.இன்னும், தன்னைச் சார்ந்தோரிடமும் மகிழ்வுடன் திரும்புவான்.

84:10.ஆனால், எவனுடைய பட்டோலை அவனுடைய முதுகுக்குப் பின்னால் கொடுக்கப்படுகின்றதோ-

84:11.அவன் (தன்குக்) 'கேடு' தான் எனக் கூவியவனாக-

84:12.அவன் நரகத்தில் புகுவான்.

84:13.நிச்சயமாக அவன் (இம்மையில்) தன்னைச் சார்ந்தோருடன் மகிழ்வோடு இருந்தான்.

84:14.நிச்சயமாக, தான் (இறைவன் பால்) ''மீளவே மாட்டேன்'' என்று எண்ணியிருந்தான்.

எனவே மாணவச் சமுதாயமே நம் வாழ்வில் படிப்பில் எத்தனையோ கஷ்டங்களைச் சந்தித்தோம் அது சில காலங்கள் தான் ஆனால் சுகங்கள் நிறைந்த மறுமை வாழ்வை முடிவில்லாதது சுகங்கள் நிரந்தரம் ஆகவே ஈமானுடன் அதற்க்கு அதிகம் முயற்சி செய்வோம். மறுமை வாழ்வுக்கு அதிகம் முயற்சி எடுக்க மாணவச் சமுதாயம் மற்றும் முழுமனிதத் சமுதாயத்திற்கும் ஈமானை கொடுத்து அல்லாஹ் கிருபை செய்வானாக !ஆமீன் அமீன் யாரப்பல் ஆலமீன்!

             ஆக்கம்,
    நஜ்முத்தீன் (தீனியாத் ஆசிரியர், 
           கா.மு.ஆ.மேல் பள்ளி. (அதிரை)

------------------------------------------------------------------------
குறிப்பு: தயவு செய்து இந்தப் பதிவை யாரும் COPY செய்ய வேண்டாம்..
-------------------------------------------------------------------------