Hot Posts

6/recent/ticker-posts

இன்றைய சமுதாயத்தில் பெண்களின் அவல நிலைகள்!!!

இன்றைய பெண்கள் சமுதாயம் மிகவும் சீர்கெட்டு வருவதை நாம் கண்கூடாக காண்கிறோம்.அல்லாஹ் த ஆலா திருமறையில் குறிப்பிடுகின்றான்.


ஆண்களே! நீங்கள் தங்கள் மனைவியர்களை உங்களின்  பொறுப்புக்கு கீழே வைத்துக் கொள்ளுங்கள்.ஆண்களே! நீங்கள் தான் நிர்வாகத்திற்குத் தகுதியானவர்கள் என்று அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தெளிவாக திருமறையில் குறிப்பிடுகின்றான்.இது அல்லாஹுடைய சொல்லாகும்.ஆனால்  இன்றைய காலகட்டத்தில் பெண்கள் எந்த  திசையை நோக்கி செல்கிறார்கள் என்பதை விளக்கமாக சிந்தித்துப் பார்ப்போம்.

1400 ஆண்டுகளுக்கு  முன்பாக இருந்த பெண்களின் செயல்களையும்,பேச்சுக்களையும் அவர்களின்  வணக்க வழிபாடுகளையும் பாப்போம்.முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மனைவியர்களில் நடைமுறைகளை சிந்தித்துப் பார்ப்போம்.அருமை நாயகம் (ஸல்) அலைஹி வஸல்லம் அவர்களின் பேச்சுக்கு அவர்களின் மனைவியர்கள் அப்படியே கட்டுப்  பட்டார்கள்.

ஒரு  விஷயத்தை சுட்டிக்காட்டி எச்சரித்தால் அதற்க்கு மறுப்பு சொல்ல மாற்றார்கள்.அன்றைய கால கட்டத்தில் வாழ்ந்த பெண்மணிகள் நபி(ஸல்) அவர்களின் பேச்சுக்கு மரியாதை கொடுத்து நல்ல முறையில் வாழ்ந்தார்கள்.நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மனைவியர்களோடு எப்படி வாழ்ந்து பாசம் அன்போடு இருந்தார்கள் அதே போன்று மனைவியர்களும் நபி(ஸல்) அவர்களுக்கு எப்படி அடக்கத்தோடு இருந்தார்கள் என்பது நமக்கு தெரியும்.

எந்த அளவுக்கு வணக்கத்திலும் அறிவாளிகளாக திகழ்ந்தார்கள்.ஒவ்வொரு நபிகளையும் எடுத்துக்  கொண்டால்  அவர்களின் வாழ்க்கைகளை சிந்தித்துப் பார்கின்ற போது அது இன்றைய காலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கக் கூடிய ஒவ்வொரு முஸ்லிமான மனிதர்களுக்கு ஒரு பாடமாக அமையும்.அன்றைய காலகட்டத்தில் நபி(ஸல்) அவர்கள் கஷ்டப்பட்டு துன்பங்களுக்கு ஆளாகி பல விதமான சிரமங்களுக்கு பின்னால் தான் நமக்கு இஸ்லாத்தை பரப்பினார்கள்.
இன்றைக்கு அந்த இஸ்லாம் நம்மிடத்தில் பாதுகாப்பாக இருகின்றதா ?என்பதை சிந்தித்துப் பார்க்கும் போது நிச்சயமாக இல்லை.ஆனால் சில நபர்களிடத்தில் தான் இருக்கிறது.இது மிகவும் வருந்த வேண்டிய விஷயம்.
அந்த சில நபர்கள் யார் என்றால் ஆலிம்கள்,உலமாக்கள் போன்றோரிடம் தான் உள்ளது.

இன்றைய காலகட்டத்தில் வாழ்ந்து வரும் பெண்கள் பெரும்பாலானோர் ஷைத்தான் வலையில்  சிக்கிக் கொண்டு வெளியில் வரமுடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.முஸ்லிமாக பெண்களிடத்தில் வெட்கம் என்ற உயர்ந்த நிலை எடுத்து வீசப்பட்டுள்ளது.வெட்கம் என்பது ஆணுக்கும்,பெண்ணுக்கும் முக்கியமான ஒன்றாகும்.பெண்ணுக்கு தான் வெட்கம் மிகவும் தேவையானது.வெட்கம் என்பது ஒரு பெண்ணுக்கு கேடயமாகும்.ஆனால் இன்று பெண்களிடத்தில் வெட்கத்தை பார்க்க முடியவில்லை.ஒரு சில பெண்களிடத்தில் தான் வெட்கத்தை பார்க்க முடிகிறது.

இன்னும்  சில பெண்கள் கணவனுக்கு அடிபணியாமல் வாழ்ந்து வருகிறார்கள்.இன்றைய பெண்களிடத்தில் ஆண்களை போன்று நாமும் உடை அணிய வேண்டும்,அவர்களைப் போன்று சம்பாதிக்க வேண்டும் என்ற பெருமை,ஆணவம் வந்து விட்டது.இது கியாமத் நாளின் அடையாளமாகும்.
எப்பொழுது ஒரு பெண் வெளியில் சென்று தனியாக சம்பாதிக்க துணிச்சல் வந்து விட்டதோ அப்பொழுதே அவளிடத்தில் குழப்பமும் வந்து விடும்.

கணவனின் அனுமதி இல்லாமல் வெளியில் செல்வது ஹராம்.கணவன் வெளிநாடுகளில் இருந்தால் வீட்டில் உள்ள தாயிடமும்,தந்தையிடமும் சொல்லி விட்டு செல்ல வேண்டும்.ஆனால் இன்று நிலை தலை கீழாக உள்ளது.பெண்கள் கூட்டமாக வெளியூர்களுக்கு செல்வது, கணவனிடத்தில் அனுமதி இல்லாமல் செல்வது குழப்பத்திற்கு வாசலாக  இருக்கிறது.

நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் கூறினார்கள்.பெண்களே!நீங்கள் உங்களின் கணவனிடத்தில் மட்டும் தான் உடல் முழுவதையும் காண்பிக்கலாம்.அதை தவிர்த்து அந்நிய ஆண்களிடத்தில்  உங்களின் தலை முடிகளை மறைத்துக்  கொள்ளுங்கள் என்று கடுமையாக கூறியுள்ளார்கள்.இன்றைய சூல்நிலையை பார்த்தால் கணவனிடத்தில் மனைவியை விசாரித்தால்  அவர் சொல்லுவார்.என்னை பெண்ணாக்கி அவள் தான் ஆண்களை போன்று உலாவி வருகிறாள் என்று கவலையோடு சொல்லுவார்.இது இன்று நடக்கக் கூடிய உண்மை சம்பவம்.
இது முழுக்க,முழுக்க மார்கத்திற்கு மாறுபட்ட ஒன்றாகும்.

நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.எந்த மனைவி கணவனின் சந்தோசத்தோடு உலகத்தை விட்டுப்  பிரிகிறாலோ  அவள் சுவனத்தில் இடம் உண்டு.எந்த மனைவி தன  கணவனின் கோபத்தோடும்,வேருபோடும் உலகத்தை விட்டுப் பிரிகிறாலோ அவளுக்கு நரகம் உண்டு என்று நபி(ஸல்)கூறினார்கள்.

அல்லா ரப்புல் ஆலமீன் எல்லா முஸ்லிம்களின் ஆண்,பெண் அனைவரையும் ஈமானோடு உன்னுடைய பொருதத்தோடும்,கணவனின் போருததொடும் வாழ்ந்து மரணிக்க செய்வாயாக!
ஆமீன்,ஆமீன் யா ரப்புல் ஆலமீன்..
         ஆக்கம்,
     J.முகமது யூசுப்,(நூரி)
         அதிரை.