Hot Posts

6/recent/ticker-posts

எங்கே போனது குப்பை தொட்டிகள்!!!

 நமதூர் அதிரையில் சில தெருக்களில் குப்பைத் தொட்டிகள் இல்லாமல் குப்பைகள் வீதிகளில் சிதறி கிடக்கிறது.சில தெருக்களில் இருந்த குப்பைத் தொட்டிகளையும் காணவில்லை.இதனால் பொது மக்கள் குப்பைகளை எங்கே கொட்டுவது என்று தெரியாமல் தெருக்களில் கொட்டி விடுகின்றனர்.
குப்பைத் தொட்டிகள் இருந்த புதுமனைத் தெருவிலும்,சின்ன நெசவுத் தெருவிலும் குப்பை தொட்டிகளை காணவில்லை.

இதே போன்று மரைக்காயர் பள்ளி அருகில் இருந்த குப்பை தொட்டி தற்பொழுது இல்லை.
இதனால் குப்பைகளில் இருந்து தூர்நாற்றம் வீசுகிறது.சுகாதார சீர்கேட்டை தடுக்க வேண்டுமானால் சம்பந்தப் பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சின்ன நெசவுத் தெருவில் குப்பைத் தொட்டிகள் இல்லாமல் சிதறி கிடக்கும் குப்பைகள்.