ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் மூன்று நாடுகள் கிரிக்கெட் தொடர் போட்டி நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது.ஏற்கனவே ஆஸ்திரேலியா அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில் இந்திய அணி அந்த வாய்ப்பை சற்று இழந்து தவித்தது.இன்றைய போட்டியில் இலங்கையை எப்படியாவது அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற ஒரு சின்ன வாய்ப்பு கிடைத்தது.
இந்தப் போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது.தில்ஷான் 160 ரன்கள் எடுத்தார்.இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 320 ரன்கள் குவித்தது.இந்திய அணி இந்த ரன்களை 40 ஓவருக்குள் எடுத்தால் மட்டுமே கூடுதல் புள்ளிகள் கொடுக்கப்படும் என்ற மோசமான நிலைமை ஏற்பட்டது.
கோஹ்லி அபுதமாக ஆடி 133 ரன்கள் எடுத்தார்.இந்திய அணி 36.4 ஓவர்களிலே 321 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.
வெள்ளிகிழமை நடைபெற உள்ள ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் மோதும் போட்டியில் இலங்கை தோற்றால் மட்டுமே இந்திய அணி இறுதிப் போட்டிக்கு நுழைய முடியும்.
Social Plugin