Hot Posts

6/recent/ticker-posts

ஓட்டுக்கு பணம் கொடுத்தால் ஓராண்டு சிறை: மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் சிபாரிசு!!


தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணமோ, பொருளோ கொடுப்பதை தடுக்க மத்திய தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அப்படி இருந்தும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவது முற்றிலும் தடுத்தப்பாடில்லை.
 
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதையும், வாக்காளர்கள் அதை வாங்கு வதையும் தடுக்கும் விதமாக தேர்தல் கமிஷன் புதிய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
 
அதன்படி பணமோ, அல்லது பொருளோ லஞ்சமாக வழங்கினால் அது கைது செய்வதற்குரிய குற்றம் என்று மத்திய அரசிடம் பரிந்துரை செய்துள்ளது. இதற்காக ஒரு ஆண்டு சிறை தண்டனையோ அல்லது அபராதமோ விதிக்கப்படும்.
 
தேர்தல் கமிஷனின் இந்த பரிந்துரையை மத்திய சட்ட அமைச்சகம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதற்காக சட்ட திருத்தம் செய்யப் படுகிறது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 123 (1)-வது பிரி வின்படி ஓட்டுக்கு பணம் வாங்குவது ஊழல் நடவடிக்கையாகும்.
 
5 மாநில தேர்தல்களிலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் கமிஷன் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டது. அதன்படி பஞ்சாபில் ரூ.12.13 கோடி பணமும், உத்தரகாண்டில் ரூ.1.35 கோடியும், மணிப்பூரில் ரூ.47 லட்சமும், கோவாவில் ரூ.36 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
 
7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் உத்தரபிரதேசத்தில் மட்டும் இதுவரை ரூ.53.5 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.