Hot Posts

6/recent/ticker-posts

எம்ஜிஆர் பல்கலையில் முழு, பகுதி நேர பிடெக் எம்டெக் படிக்க அட்மிஷன்!!


சென்னையில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக் கழகத்தில் பிடெக், எம்டெக் முழுநேர, பகுதிநேர படிப்புகளுக்கு 2012ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

 பிடெக் முழுநேர படிப் பில் கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ்  அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினிய ரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிகேஷன் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் அண்ட் சாப்ட்வேர் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன் இன்ஜினியரிங், இன்ஸ்ட்ருமென்டேஷன் அண்ட் கன்ட்ரோல் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங், இண்டஸ்ட்ரியல் பயோ டெக்னாலஜி, பயோ டெக்னாலஜி, கெமிக்கல் இன்ஜினியரிங், இன்பர்மேஷன் டெக்னாலஜி, டெலிகாம் இன்ஜினியரிங் ஆகிய 14 பிரிவுகள் உள்ளன. இதில் சேர 

கணிதத்தை ஒரு பாடமாக கொண்டு பிளஸ்-2 படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பிடெக் பகுதி நேர படிப்பில் கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங், கெமிக்கல் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரிக் கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் ஆகிய 6 பாடப் பிரிவுகள் உள்ளன. இதில் சேர இயற்பியல், கணிதம், வேதியியல், உயிரியல் பாடங்களில் பிஎஸ்சி பட்டம் பெற்றவர் கள் விண்ணப்பிக்கலாம். அல்லது ஏதேனும் ஒரு பொறியியல் பாடத்தில் டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதி உண்டு. பிடெக் படிப்புக்கான கல்வித்தகுதியை பெற்றவர்கள் பிடெக் படிப்பில் இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.
 எம்டெக் முழுநேர மற்றும் பகுதிநேர படிப்பில் எனர்ஜி இன்ஜினியரிங், பவர் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டிரைவர்ஸ், பவர் சிஸ்டம்ஸ், பயோ மெடிக்கல், கன்ஸ்ட்ரக்ஷன் அண்ட் எம்ஜிஎம்டி, கம்ப்யூட்டர் எய்டட் டிசைன், விஎல்எஸ்ஐ டிசைன் எம்பெடட் சிஸ்டம்ஸ், ஸ்ட்ரக்சுரல், அப்ளைடு எலக்ட்ரா னிக்ஸ், பயோ டெக்னாலஜி, இண்டஸ்ட்ரியல் டிசைன், தெர்மல், ஐடி, கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளன. பிடெக் படிப்பை நிறைவு செய்தவர் கள் விண்ணப்பிக்கலாம்.
தகுதியான மாணவர்கள் பல்கலையால் நடத்தப் படும் நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். 

வரும் மே.20ம் தேதி சென்னை, பெங்களூர், ஐதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நுழைவுத்தேர்வு நடைபெறும். விண்ணப்பத்தை ‘Dr.M.G.R. Educational - Research Institute‘ என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் ரூ.500க்கு டிடி எடுத்து நேரடியாக செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். ரூ.550 செலுத்தி தபாலில் பெறலாம். விண்ணப்பங்களை வரும் மே 16ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். 

முழுவிவரங்களை ‘Dr.M.G.R. University, Maduravoyal, Chennai600095‘ என்ற முகவரியிலோ, 044-64522216, 23782176 ஆகிய எண்களிலோ தொடர்பு கொண்டு அறியலாம்.