Hot Posts

6/recent/ticker-posts

மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன்குடமா?


பெண் குழந்தைகளின் மகத்துவம் தெரியாமல் பிரசவிக்கும் பெண்ணின் வீட்டாரிடம் வரவா? செலவா? என்று கேட்கும் அவல நிலை தோன்றி அதிக நாட்கள் ஆகி விட்டன. வரவு என்றால் ஆண் குழந்தை.செலவு என்றால் பெண் குழந்தை என்று அர்த்தமாம்!

முதல் குழந்தை பெண்ணாக பிறந்தால் பரகத் எனக் கூறிய நபி(ஸல்)அவர்கள் "பெண் குழந்தைகளை நல்ல முறையில் பராமரித்து விடுபவர்களும் நானும் சுவர்க்கத்தில் ஒன்றாக இருப்போம் என்றும் கூறியிருக்கிறார்கள்".இதை விட வேறு சிறப்பு என்ன வேண்டும்?

பெண் குழந்தையை பெற்று விட்டோமே இனி என்ன செய்வது? உலக மக்களுக்கு மத்தியில் கெளறுவமாக தலை நிமிர்ந்து நிற்க வேண்டுமே! என எப்படியோ திருமணம் முடித்து அந்நிய வீடிற்கு தம் பெண்ணை அனுப்பி விடுகின்றபர்.பெற்ற வீட்டில் பட்ட துன்பத்தின் காயம் கூட மறையவில்லை.அதற்குள் மற்றொரு காயமா?இது என்ன சோகம்?(சோதனை) ஆம்! புகுந்த வீட்டில் அவள் படும் பாடு வெளியிலும் சொல்ல முடியாமல் உள்ளிலும் (மனதிலும்) அடக்க முடியாமல் துவண்டு விடுகிறாள்.

தம் வீட்டிற்கு மருமகளாக வரும் பெண்ணை மகள் என்ற பாசத்தோடு நடத்தும் மாமியார்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.மருமகள் என்றாலே வேலைக்காரிக்கு பதிலாகத் தான் அவளை நம் வீட்டு சுகலோகங்களை அனுபவிக்க வைத்துள்ளோம்.

தம் மகன் இல்லாவிடில் எங்கிருந்து வரும் இவளுக்கு சொகுசு வீடு!சுகமான வாழ்கை! என தப்புக்கணக்கு போட்டு தரக் லுரைவாக நடத்தும் தாய் குலங்களே அதிகம் உள்ளனர்.மருமகள் தம் வீட்டிற்கு வந்த அமானிதப் பொருள் தான் .அமானிதப் பொருளை எவாறு பாதுகாக்க வேண்டும் என்பதை தெரியாததாலும்,"ஒருவனுக்கு வாழ்க்கை துனைவியாகும் மனைவி அவனின் வேலை பார்த்து நம் கஷ்டத்தை போக்குவது அவள் நமக்கு செய்யும் உதவிதான்" என்று கூறும் மார்க்க அறிஞர்களின் கூற்றை அறியாததாலுமே அறினவீனமாக தம் மருமகளை அடிமைப்படுத்தி கொடுமைப்படுதுகின்றனர்.

மாமனாரோ வீட்டில் மனிதர் என்ற பெயரில் தாய்குலத்தின் தங்கமான பெசுகளுக்கு தலையை மட்டும் ஆட்டும் தலையாட்டி பொம்மையாக இருப்பார்.

இதோ மாமனார்-மாமியார் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சுவையான செய்திகள்;
   ஒரு முறை அலி(ரலி)அவர்கள் தம் மனைவி பாத்திமா (ரலி) அவர்களிடம் சென்றார்கள்.பிறகு கணவன்-மனைவியிடையே சிறிது மனத்தாங்கல் ஏற்படவே வெளியே வந்து பள்ளிவாசலில் படுத்துக் கொண்டார்கள்.அப்போது பாத்திமா (ரலி)அவர்களின் வீட்டிற்கு வந்த நபி(ஸல்)அவர்கள் "பெரிய தந்தையின் மகன் (என் மருமகன் அலி) எங்கே?" என்று கேட்க்க "அவர்கள் பள்ளிவாசலில் இருக்கிறார்கள்"என பதில் அளித்தார்கள்.

நபியவர்கள் அலி (ரலி) அவர்களிடம் சென்ற போது அவர்களுடைய மேல்துண்டு அவர்களின் முதுகில் கிடக்க தரையில் உள்ள மண் அவர்களின் மணியில் ஒட்டியிருக்க கண்டார்கள்.அப்போது மருமகனை தொட்டு "எழுந்திருங்கள்" அபூதூராப் (மண்ணின்) (தந்தை) என்று எழும்பி பெண்களெல்லாம் அப்படிதான் நாம் தான் அனுசரணையாக,பொறுமையாக போக வேண்டும்" என உபதேசம் கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள்.
(நூல் : புஹாரி)

மருமகன் தான் நமக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். வயதில் நாம் தாமே என மருமகன் முகத்தில் கூட முழிக்காமல் எதையும் நேரடியாக பேசித் தீர்த்துக் கொள்ளாமல் வந்தால் நம் வழியில் அவர் வரட்டும் என வரட்டு கெளருவத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கும் மாமனார்களுக்கு மேற்கூறிய ஹதீஸ் ஒரு படிப்பினையாகும்.

"அன்பு தடிபானால், குற்றம் மெலிந்து விடும்"
அன்பு மெலிந்து விட்டால்...?
 
கைப்பட்டாலும்,கால்பட்டாலும் குற்றம்.

மேற்கூறிய சொல்லில் நல்ல படிப்பினை உள்ளது.அதாவது மாமனார் கேட்கும் போது எதையும் மறைக்காமல் தந்தை,தாயிடம் எப்படி நடபோமோ அது போன்று நம் மாமனார்,மாமியார் நமக்கு தாய் தந்தையரே! என அந்தரங்க விஷயத்தை கூட வெட்கமின்றி கூறுகிறார்.

அக்காலத்தில் பதினோரு பெண்கள் ஒவ்வொருவருக்கும் தம் கணவர் இப்படிப் பட்டவர் என்ற நிறை குறைகளை பசிக் கொண்டிருந்தனர்.அப்போது ஒரு பெண் தன மாமியாரைப்பற்றி "என் கணவரின் தாயார் எத்தகையவர் தெரியுமா?
அவரது வீட்டுக் களஞ்சியம் கனமாகவே இருக்கும்.அவரது வீடு மிக விசாலமானதாகவே இருக்கும் எனக் கூறினாள்".
(நூல் :புஹாரி)

மாமியார் வீட்டில் நிறை,குறை இருந்தால் அதை  நிரையாகவே  சொல்ல வேண்டும்.ஆனால்  இன்றைய  பெண்கள் நிறை இருந்தாலும் அதை குறையாகவே சொல்கிறார்கள்.
இதை பெண்கள் முயளுமையாக தவிர்த்து கொள்ள வேண்டும்.

ஒரு முறை நபியவர்களுக்கு ஆயிஷா (ரலி) அவர்களுக்கும் எதோ ஒரு பிணக்கு ஏற்பட்டது .நடுவராக இருந்த தந்தை அபூபக்கர்  (ரலி) அவர்கள் வந்து "மாமியாருகேற்ற மருமகளாக ஒழுக்கமுடன் நடந்து கொள்"என்று கூறாமலேயே தன மகள் மீதே குறை இருக்கும் என நினைத்து அவர் கன்னத்தில் பளார் என அடித்து நம்மை அதிரவைக்கும் அதிசியமாகும்.

"விகார மனம் படைத்த மாமியாரோடு வீட்டில் 
இருப்பதை விட தேசாந்திரம் செல்வதே சிறப்பாகும்.

மாமியார்,மருமகள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போக வில்லை என்றால் வாழ்வில் சந்தோசம் என்றும் நிலைக்காது.
         ஆக்கம்,
  M.N.செய்யது அபுதாஹிர்,
     அதிரை.