Hot Posts

6/recent/ticker-posts

அதிரை பேரூராட்சித் தலைவரின் கனிவான வேண்டுகோள்!!


இன்று எத்தனையோ நோய்கள் உலகில் வலம் வந்து  கொண்டிருக்கின்றன.இதற்க்கு அடிப்படைக் காரணம் பிளாஸ்டிக் பொருள்களை உபயோகிப்பதே.இன்றைய உலகில் எந்த ஒரு தேவைக்கும் பிளாஸ்டிக் பைகளே பயன்படுத்தப் படுகிறது.இந்த பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தி விட்டு குப்பைகளில் போட்டு விடுகின்றோம்.சிலர் எரித்து விடுகின்றனர்.இதனால் சுற்றுப்புற சூழலுக்கு தான் கேடு என்பதை நாம் அனைவரும் விளங்கவும்.

சென்ற வருடம் நல்ல மழை பெய்தது.ஆனால் சமிபத்திய ஆய்வு ஒன்றில் பூமியில் தண்ணீர் இல்லை என்று கண்டுபிடிக்கப்பட்டது.ஏன் என்றால் பிளாஸ்டிக் பைகள் அதிகளவு பூமிக்கு அடியில் இருப்பதால் தண்ணீர் செல்ல முடியவில்லை என்று ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.இந்தப் பிளாஸ்டிக் பைகள் உபயோகிப்பதினால் மனிதனுக்கும் அதிகளவு கேடு.

 மார்ச் 5 -ம் தேதியுடன் பிளாஸ்டிக் பொருள்கள் உபயோகிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.இல்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிரை பேரூராட்சியால் ஒரு அறிவிப்பு விடுக்கப்பட்டது.

இதனையடுத்து அதிரை பேரூராட்சி பெருந் தலைவர் சகோ.S.H.அஸ்லம் இன்று தரகர் தெரு ஜும்ஆ பள்ளியில் இது பற்றி மக்களிடம் விளக்கி கூறினார்.இந்த பிளாஸ்டிக் பைகள் ஏற்படுவதினால் எவ்வளவு தீமைகள் என்பதனையும் விளக்கி கூறினார்.

பழங்காலத்தில் (ஒமல்) பைகள் தான் அதிக அளவில் உபயோகிக்கப்பட்டன.இதனால் மக்கள் நோய் நொடியின்றி வாழ்ந்தனர்.தற்பொழுதும் அந்த முறையையே பின்பற்றுவோம்.நம்முடைய  சந்ததிகள் சிறப்பாக வாழ நாம் தான் வழிவகை செய்ய வேண்டும்.
அதிரை பொது மக்கள் இதற்க்கு ஒத்துழைப்புத் தரவேண்டும் என்றார்.