முன்பெல்லாம் ஆசிரியருக்கு பயந்த காலம் போய் தற்பொழுது ஆசிரியரையே கொலை செய்யும் அளவுக்கு மாணவனுக்கு தைரியம் வந்திருக்கிறது. இதற்க்கெல்லாம் காரணம் தாய்,தந்தையின் வளர்ப்பு.அந்த மாணவனை அவனது தாய்,தந்தை சரியான முறையில் வளர்த்திருந்தால் இது போன்ற கொடூரமான செயல் அரங்கேறி இருக்காது.
சென்னை பாரிமுனை அரண்மனைக்காரன் தெருவில் உள்ள செயின்ட் மேரீஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் இந்த கொடூர சம்பவம் நேற்று நடந்துள்ளது. இந்தி பாடம் எடுத்து வந்த உமா மகேஸ்வரி என்ற 38 வயது ஆசிரியை மாணவர்களிடம் மிகவும் அன்பு காட்டுவார் என்று மாணவர்கள் கூறினர்.இப்படிப்பட்ட ஆசிரியரை எப்படி கொள்ள மனம் வந்தது என சக மாணவர்கள் கதறி அழுதது நெகிழச் செய்துள்ளது.
உமா மகேஸ்வரிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.தனது தாய் கொலை செய்யப்பட்ட செய்தி அறிந்து பள்ளிக்கு வந்து தனது தாயின் உடலைப்பார்த்து இரு மகள்களும் கதறி அழுதனர்.
அந்த மாணவனின் தாய்,தந்தை வீட்டில் கடைசி மகன் என்பதால் செல்லமாக வளர்த்துள்ளனர்.இந்த செள்ளதினால் தான் அந்த மாணவனுக்கு இவ்வளவு தைரியம் வந்துள்ளது.
ஆசிரியர்கள் நம் கண்களைப் போன்றவர்கள்.கண்கள் இல்லை என்றால் உலகமே இல்லை.கல்வி கற்றுத் தருபவர்க்கு இது தான் கூலியா?
"குழந்தைகளுக்கு செல்லம் ஓர் அளவு கொடுக்க வேண்டும்.கண்டிக்கும் நேரத்தில் கண்டிக்க வேண்டும்.அது எந்தப் பெற்றோராக இருந்தாலும் சரி!
ஒரே மகன் ,கடைசி மகன், மூத்த மகன் என்று செல்லம் கொடுக்க கூடாது.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள்.பெற்றோர்கள் அளவுக்கு அதிகமாக செல்லம் கொடுத்தால் இது போன்ற தீய செயல்களில் தான் கொண்டு சேர்க்கும்".
மாணவர்கள் அவர்களுடைய வாழ்க்கையில் நன்றாக இருக்க வேண்டும்.கஷ்டமின்றி உலகில் வாழ வேண்டும் என்று நினைக்கும் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் மிகவும் அன்பு காட்ட வேண்டும்.
ஆசிரியர்கள் கண்டித்தால் அதனை பொருட்படுத்த கூடாது.நாம் வாழ்க்கையில் சிறந்து விளங்குவதற்கு தான் ஆசிரியர்கள் கண்டிக்கின்றனர் என்று ஒவ்வொரு மாணவர்களும் நினைக்க வேண்டும்.
மாணவர்களே! இது போன்ற தீய செயல்களில் ஈடுபடுவது பெருங்குற்றம்!
Social Plugin