பிளஸ் 2 தேர்வு நாளை துவங்குகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 8 லட்சத்து 22 ஆயிரத்து 341 மாணவ, மாணவியர் இத்தேர்வை எழுத உள்ளனர்.
இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
+2 தேர்வு வரும் 8ம் தேதிதமிழ் முதல் தாளுடன் துவங்கி வரும் 30ம் தேதி தொழில் தேர்வுகளுடன் முடிவடைகிறது. +2 தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்பட 5,557 மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து மொத்தம் 7 லட்சத்து 60 ஆயிரத்து 975 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.
தேர்வு எழுதுபவர்களில் 3 லட்சத்து 53 ஆயிரத்து 6 மாணவர்களும், 4 லட்சத்து 7 ஆயிரத்து 969 மாணவிகளும் ஆவர். மாணவர்களை விட 54 ஆயிரத்து 963 மாணவிகள் கூடுதலாக தேர்வு எழுத உள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் +2 பொதுத் தேர்வுக்கு மொத்தம் 1,974 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பள்ளி மாணவர்களை தவிர தனித் தேர்வர்களாக 61,319 பேர் தேர்வு எழுத உள்ளனர்.
+2 தேர்வில் டிஸ்லெக்சியா, கண் பார்வையற்றோர், காது கேளாதோர், வாய் பேசாதோர் மற்றும் இதர மாற்று திறனாளுக்காக சொல்வதை எழுதுபவர், ஒரு மொழிப் பாடம் தவிர்ப்பு மற்றும் கூடுதல் ஒரு மணி நேரம் ஆகிய சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கல்வித்துறை அலுவலர்களுடன் இணைந்து செயல்படுவார்கள். அக்குழுவில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், சார் ஆட்சியாளர், வருவாய் கோட்டாட்சியர் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். இக்குழு மாவட்டங்களில் எல்லைக்குட்பட்ட தேர்வு மையங்களை திடீர் ஆய்வு செய்து முறைகேடுகள், ஒழுங்கீனங்கள் ஆகியவை நடைபெறாத வகையில் தீவிரமாக கண்காணிப்பர்.
முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் தேர்வு மையங்களைப் பார்வையிட கண்காணிப்புக் குழுக்களை நியமித்துள்ளனர். இந்த கண்காணிப்புக் குழுக்கள் தேர்வு மையங்களில் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளும்.
எக்காரணம் கொண்டும் பொதுத் தேர்வு நேரங்களில் தேர்வு முடியும் வரை அப்பள்ளியைச் சேர்ந்த தாளாளர்களோ, ஆசிரியர்களோ, அடிப்படை பணியாளர்களோ தேர்வு நடக்கும் வளாகத்தில் இருக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
துண்டுத்தாள் வைத்திருத்தல், துண்டுத்தாள்களைப் பார்த்து எழுத முயற்சி செய்தல், பிற மாணவர்களைப் பார்த்து எழுதுதல், தேர்வு அதிகாரிகளிடம் முறைகேடாக நடந்து கொள்ளுதல், தேர்வுத்தாள் மாற்றம் செய்தல், ஆள் மாறாட்டம் செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் கடுங்குற்றங்களாக கருதப்படும்.
அத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கு விதிகளின்படி உரிய தண்டனை வழங்கப்படும்.
+2 பொதுத் தேர்வை தமிழ் வழியில் பயின்று தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தமிழ் வழியில் பயின்று +2 தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 36 ஆயிரத்து 569 ஆகும்.
தேர்வு அறையில் மாணவ-மாணவியரின் மன இறுக்கத்தைப் போக்கி, விடைகளைத் திட்டமிட்டு தேர்வுகள் நல்ல முறையில் எழுதுவதற்காக, வினாத்தாளை மாணவ, மாணவியருக்கு வழங்கிய உடன், அதனை முழுமையாக படிப்பதற்காகப் 10 நிமிட கால அவகாசமும், அதனைத் தொடர்ந்து பதிவெண் முதலான முக்கிய விவரங்களை விடைத்தாளின் முகப்புப் பக்கத்தில் பிழையின்றி எழுதுவதற்கென 5 நிமிட கால அவகாசமும் வழங்கப்படுகிறது.
தேர்வு மையங்களில் ஒழுங்கீனச் செயல்களுக்கு உடந்தையாகவோ, ஊக்குவிக்கவோ பள்ளி நிர்வாகம் முயன்றால், பள்ளி தேர்வு மையத்தை ரத்து செய்தும், பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்தும் பள்ளிக் கல்வி இயக்குனருக்கு பரிந்துரை செய்தும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த மாதம் மற்றும் அடுத்த மாதம் நடைபெற உள்ள +2, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு கூடுதல் ரகசியக் குறியீடு மற்றும் புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
ஆள்மாறாட்டத்தை தவிர்க்கும் பொருட்டு தேர்வர்களுடைய புகைப்படங்கள் பெயர் பட்டியலிலும், தேர்வுக்கூட நுழைவுச் சீட்டிலும் பதிந்து வழங்கப்பட்டுள்ளது. எனவே ஆள்மாறாட்டம் செய்தால் பிடிபடுவார்கள்.
+2 தேர்வில் இந்த ஆண்டு அனைத்து பாடங்களுக்கான வினாத்தாள்களையும் தமிழ் வழியோடு ஆங்கில வழி வினாக்களும் ஒரே வினாத்தாளில் இடம்பெறும் வகையி்ல் அச்சிடப்பட்டுள்ளது.
இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், கணிதம், வரலாறு, வணிகவியல், பொருளியல் மற்றும் கணக்கியல் ஆகிய பாடங்களுக்கு சிறுபான்மை மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் உருது ஆகிய மொழிகளிலும் வினாத்தாள்கள் வழங்கப்படும். இந்த வினாத்தாள்களில் ஆங்கில வழியிலும் வினாக்கள் இடம் பெற்றிருக்கும்.
சிறைவாசிகளும் கல்வியில் ஏற்றம் கண்டிட, சிறையிலேயே கடந்த சில ஆண்டுகளாக தேர்வு மையம் அமைக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டு +2 தேர்வை 47 சிறைவாசிகள் புழல் சிறையிலும், 2 பேர் வேலூர் சிறையிலும் எழுதுகின்றனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Plugin