Hot Posts

6/recent/ticker-posts

மின்வெட்டால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு 20% கூடுதல் மதிப்பெண் தேவை!!


சமச்சீர் கல்வி விவகாரம், தொடர்மின்வெட்டு ஆகியவற்றால் அரசு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 20 விழுக்காடு கூடுதலாக மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் வரலாறு காணாத மின்வெட்டு நிலவுகிறது. இதனால் தொழிலாளர்கள், மாணவர்கள், இல்லத்தரசிகள் உள்பட அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடுமையான மின்வெட்டு, சமச்சீர் கல்வி அமல்படுத்துவதில் தாமதம் ஆகிய காரணங்களுக்காக அரசு தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு 15 முதல் 20% கூடுதல் மதிப்பெண்கள் வழங்க தமிழக முதல்வர் உத்தரவிடவேண்டும்.

தமிழக மக்களுக்கு தற்போது விலையில்லா பொருட்களை விட தடையில்லா மின்சாரமே தேவையாக உள்ளது. தமிழகத்தில் பணத்திற்காக கடத்தல், கொலை, கொள்ளை ஆகியவை நடந்து வருவது அன்றாட நிகழ்ச்சிகளாக மாறி விட்டது.

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் புதிய அணை கட்டக்கூடாது என்பது தமிழக காங்கிரஸின் கருத்து. இந்த விஷயத்தில் உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை கேரள அரசு ஏற்க வேண்டும். தவறும் பட்சத்தில் கேரள அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றார்