சாலை விபத்துக்களை தடுக்கும் வகையில் மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வர முடிவு செய்துள்ளது. இதன்படி மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவருக்கு அதிகபட்சம் 4 ஆண்டு சிறையும், செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுபவருக்கு ரூ.500 அபராதமும் விதிக்கப்படும்.
இதேபோல் மத்திய அரசு கொண்டு வரும் சட்டதிருத்தத்தில் 43 வகையான சாலை விதிமீறல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
எதெல்லாம் சாலை விதிமீறல்கள்:
1. சிவப்பு சிக்னலை மீறி வாகனம் ஓட்டுவது.
2. இன்டிகேட்டர் போடாமல் இடதுபுறம் நோக்கி வாகனத்தை ஓட்டிச் செல்வது.
3. அனுமதி இல்லாத இடத்தில் வாகனத்தை நிறுத்துவது.
4. மோட்டார் சைக்கிளில் 3 பேர் பயணம் செய்வது.
5. ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டுவது.
6. நம்பர் பிளேட் இல்லாமை.
7. பயணிகளிடம் கார் ஓட்டுனர் தவறாக நடந்து கொள்வது.
8. வாடகை கார்-ஆட்டோ டிரைவர் அதிக கட்டணம் வசூலிப்பது.
9. வாடகை கார் டிரைவர், பயணி அழைக்கும்போது வரமறுப்பது.
10. இரவில் லைட் போடாமல் செல்வது.
11. ஹாரன் இல்லாமல் வாகனம் ஓட்டுவது.
12. சைலன்சர் இல்லாமல் வாகனம் ஓட்டுவது.
13. எண் சரியாக தெரியாத நம்பர் பிளேட்டுடன் வண்டி ஓட்டுவது.
14. சாலையில் வாகன நிறுத்தகோட்டை கடந்து சென்று நிற்பது.
15. சட்டத்திற்கு உட்பட்ட திசையில் வாகனம் ஓட்ட மறுப்பது.
16. வாகனம் ஓட்ட அனுமதி பெறாதவரை வண்டி ஓட்டச் செய்வது.
17. உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவது.
18. 18 வயதுக்குட்பட்ட மைனர்கள் வாகனம் ஓட்டுவது.
19. அதிக வேகமாக வாகனம் ஓட்டுவது (முதல் குற்றம்).
20. அதிக வேகமாக வாகனம் ஓட்டுவது (அடுத்தடுத்து செய்யும் குற்றம்)
21. வேகமாக வாகனம் ஓட்டுவதற்கு உடந்தையாக இருப்பது.
22. ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுவது (முதல் குற்றம்)
23. ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுவது (2-வது குற்றம்)
24. பதிவு செய்யாத வாக னங்களை ஓட்டிச் செல்வது.
25. மஞ்சள் கோட்டை கடப்பது.
26. சில சாலைகளில் அமல்படுத்தப்படும் போக்குவரத்து தடை நேரத்தை மீறுவது.
27. ஒரு வழிப்பாதை, இடதுபுறம்-வலதுபுறம் செல்ல தடை, ஹாரன் அடிக்கத் தடை போன்றவற்றை மீறுவது.
28. வாகனங்களில் அதிக புகை வெளியேறுவது.
29. அதிக ஒலியுடன் ஹாரன் ஒலிப்பது.
30. நடத்துனர் சீருடை அணியாமல் இருப்பது.
31. ஓட்டுநர் சீருடை அணியாமல் இருப்பது.
32. நடத்துனர் ‘பேட்ஜ் அணியாமல் இருப்பது.
33. சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றிச் செல்வது.
34. பயணிகள் வாகனத்தில் சரக்குகளை ஏற்றி செல்வது.
35. வாகனங்களில் அமர்ந்து புகை பிடிப்பது.
36. வாகனங்களில் வண்ண விளக்குகளை பயன்படுத்துவது.
37. வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசுவது.
38. தவறான முறையில் முன்புறம் செல்லும் வாகனத்தை முந்துவது.
39. மது அருந்தி விட்டு வாகனத்தில் பயணிகளை ஏற்றிச் செல்வது.
40. வாடகைக்கு பயன்படுத்த அனுமதி பெறாமல் வாகனம் ஓட்டுவது.
41. ஓடும் வாகனத்தில் டிரைவர் ஏறுவது.
42. ஓடும் வாகனத்தில் பயணிகள் ஏறுவது.
43. சட்டப் பிரிவு 192 (1) (2 அல்லது அதற்கும் மேற்பட்ட தடவை குற்றம் செய்வது)
இனி ஸ்டைலா வண்டியில உட்கார்ந்துகிட்டு புகை பிடிப்பீங்களா? கொஞ்சம் வேகமாக போன்னு பின்னாடி உட்கார்ந்துகிட்டு கலாய்ப்பீங்களா? எல்லாத்துக்குமே தண்டனை தான்.
Social Plugin